மறைக்கப்பட்ட உண்மைகள் – 2

இன்று வெளிநாடுகளில் சுகபோகமாக வாழும் சிலர் அன்று ஈழ விடுதலை அமைப்புக்களில் அதிகாரத்தை நிறைவேற்றும் உறுப்பினராக இருந்து அவ் அமைப்பையும், அதன் தலைமையையும் அழித்து சின்னாபின்னமாக்கிவிட்டு வெளிநாடுகளுக்குத் தப்பிவந்தவர்கள் இவர்கள். புலிகளால் தங்கள் உயிருக்கு ஆபத்து என்று பெரும் கதையாடல்களைக் கூறி, மறைமுகமாக பயங்கரவாத்தை (புலிகளை) ஆதரிப்பதற்கான செயற் பாடுகளை செய்கின்ற நபர்கள் தான் இவர்கள். இவர்கள் வெளி நாடுகளில் இயங்கும் மாற்றுக் கருத்து அமைப்புடன் (இந்த அமைப்புக்கள் உண்மையான மாற்றுக் கருத்து அமைப்புத்தான் என்ற கேள்வியை எழுப்பியும், இவ் அமைப்புக்களை உருவாக்கியவர்கள் யார் என்று வினாவினால் உண்மை நிலை புரியும். இதற்கு உதாரணமாக ரஜினி திரராணகம கொலையை ஈபி தான் கொலை செய்ததாகக் கூறி அறிக்கை விட்ட நபர்கள் (இதில் ஈபி யில் இயங்கிய முக்கிய உறுப்பினர்களும் உண்டு) பின் புலி தான் இப் படு கொலைக்குக் காரணமானவர்கள் என்று தெரியவந்த பின்பும் தாங்கள் விட்ட அறிக்கைக்கு ஒரு மாற்று அறிக்கை விடாதவர்கள்.

இன்று வரை அதற்கு மறுப்பு அறிக்கை இவர்களில் யாரும் விடவில்லை. இவர்கள் யார் சார்பாக இயங்கினார்கள் என்ற உண்மை உங்களுக்குப் புரிந்து இருக்கும்.  இந்த மாற்று அமைப்புடன் இணைந்து செயலாற்றித் தங்கள் தில்லாங் குடி வேலைகளைச் செய்ய முடியாமல் போனதால், அத்த அமைப்புகளில் இருந்து வெளியேறி, புதிய புதிய அமைப்புக்களை உருவாக்கித் தங்களைத் தலைவர்களாக்கிக் கொண்டு இயங்கத் தொடங்கினார்கள். இவர்கள் தாங்கள் தமிழ் மக்களின் போராட்டத்தைக் கைவிட வில்லை என்று கூறுகின்றார்கள்.

அமைப்பையோ, தனி மனிதனையோ சாடுவதற்காக இதை நான் எழுதவில்லை. இதை வாசிக்கும் போது உண்மையை உணர்ந்து பக்குவப்பட்ட நபர்களாக (மனிதர்களாக) மாற வேண்டும், கண்மூடித் தனமாக மற்றவர்களைப் பிழை கூறுவது எனது எண்ணம் அல்ல.

(“ஒருவனைப் பிழையானவன் என்று விரல் நீட்டிக் கூறும் போது மூன்று விரல்கள் உங்களைப் பிழையானவன் என்று கூறுகின்றது”. கட்டை விரல் அழுத்திப் பிடித்துப் பிழையானவன் என்று காட்டுகின்றது).

மனிதன் பிழை விடுவது ஜதார்த்தம். ஆனால் அதே பிழையைத் திரும்பத் திரும்ப விடுவது அதர்மமாகும்.

சுயநிர்ணய உரிமை என்பது பிரிந்து போகின்ற உரிமையை உள்ளடக்கியது  ஈரோஸ் அமைப்பும், ஈ. புp. ஆர். எல். எஃவ் அமைப்பும் தான்

பிரிந்து போகின்ற சுயநிர்ணய உரிமை என்ற கொள்கையை வகுத்துச் சுயநிர்ணய உரிமைக்குப் புதிய அர்த்தத்தைக் கொடுத்தவர்கள். இது யாழ் ஈழத் தேசியத்தை உள்வாங்கியதன் விழைவாகவும், யாழ்த் தமிழ்ப் பேசும் மக்களை நம்ப வைக்க வேண்டும் என்பதற்காகவும் கூறப்பட்ட வசனம் (ஏமாற்றுவதற்கு).

1953 ம் ஆண்டு தனி ஈழத்தை மையமாக வைத்து அடங்காத் தமிழர் முன்னணி உருவாக்கப்பட்டது.

1. மேகன், பிலாக்கர் தலைமையில் சிகப்புக் களுகுகள் (இவ் இயக்கத்தைப் பலர் அறிந்து இருக்க வில்லை) என்ற இயக்கம் உருவாகியது.

2. முத்துக் குமாரசாமியின் தலைமையில் ஈழ விடுதலை இயக்கம் உருவாகியது.

3. யாழ் உயர் மேலாதிக்க மக்களின் பிள்ளைகள் லண்டனுக்குப் படிக்கச் சென்ற சில இளைஞர்கள் இரடணசபாபதியின் தலைமையில் ஈரோஸ் என்ற இயக்கத்தை உருவாக்கி தமிழ் ஈழத்தைப் பிரகடனம் செய்தார்கள்.

4. அமர்தலிங்கம் தன் அரசியல் எதிரிகளை அழிப்பதற்குச் செட்டியின் தலைமையில் ஒரு தலை விடுதலைப் புலிகள் என்ற ஆயுதக் குழுவை உருவாக்கினார்.

5. யாழ் மேலாதிக்க மையவாதத் தலைமைக்கு எதிராகச் சுந்தரம் தலைமையில் புதிய பாதைக் குழு (புளொட) உருவாகியது.;,

6. தமிழ்த் தேசியத்தை முதன்மைப்படுத்தி இந்தியாவை மையமாக வைத்துச்  செவ் ஈழம் என்ற அடிப்படையில் தங்கத் துரையின் தலைமையில் ரெலோ உருவாகியது. (ஆரம்பத்தில் பெயர் குறிபிடப்படாமல் இயங்கிய அமைப்பு)

7. கல்வித் தரப் படுத்தலுக்கு எதிராக டேவிச்சன் தலைமையில் தமிழ் மாணவர் ஒன்றியம் உருவாகிப் பின்,  கோஸ்சாக இயங்கியது (ஈரோசின் ஈழத்து அரசில் அமைப்பு) பின் நாவாவின் தலைமையில்

ஈ. பி. ஆர். எல். எஃவ், என்ற அமைப்பாக மாறியது. (கோஸ் என்பது ஈழ மாணவர் பொது மன்றம்)

8. தற் கொலைக் கலாச்சாரத்தையும், கொலைக் கலாச்சாரத்தையும் முதன்மைப் படுத்திச் சிவகுமாரன் என்ற தனிமனித இயக்கம் உருவாகியது.

(அன்று யாழ ;உயர் மேலாதிக்க மேட்டுக் குடிச் சிந்தனையை உள்வாங்காமல் இயங்கிய  மாணவர் அமைப்புக்கலே இருந்தன. இதனால ஈழ விடுதலை அமைப்புகளுடன் இணைந்து இயங்குவதற்கு முடியாமல் தனித்து இயங்கினார்.) அத் தலைமைகளின் சாதி ரீதியதன பார்வையால்

இதனால 9.யாழ் உயர் மேலாதிக்க இளைஞர்களை மையமாக்க வைத்து சத்தியசீலன் தலைமையில் தமிழ் மாணவர் பேரவை உருவாகியது.,

9. தமிழ் இளைஞர்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருப்பதற்கு யாழ் மையவாதத் தலைமை தமிழ் இளைஞர் பேரவையை உருவாக்கியது.

10. யாழ் மேலாதிக்க மையவாதத் தலைமையின் தோல்வியால் செல்வ நாயகம் தலைமையில் தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாகியது.

11. தங்கத் துரை பிரபாகரனுக்கு அடைக்கலம் கொடுத்ததை எதிர்த்து ஒப்பிரே தேவன் ரெலா என்ற இயக்கத்தை உருவாக்கினார்.

12. சமூக சேவை அமைப்பாக டேவிற் ஐயா தலைமையில் காந்தீயம் உருவாகியது.

1983 ம் ஆண்டு இடம் பெற்ற இனக் கலவரத்துக்குப் பின் 49 ஈழவிடுதலை அமைப்புக்கள் உருவாகியது

அதில் குறிப்பாக விசுவின் தலைமையில் உருவான என். எல். எஃவ். ரி, பாலச்சந்திரனின் தலைமையில் உருவான் பேரவை, இலங்கைச் சட்டக் கல்லூரியில் படித்த தமிழ் மாணவர்களின் தலைமையில் உருவான அமைப்பு (பெயர் தெரியவில்லை). வி. பி. யின் தலைமையில உருவான செந்தமிழர் இயக்கம். இவைகள் தான் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தின் பங்கு தாரர்கள் ஆகும்.

1. சிவப்புக் கழுகுகள் என்ற அமைப்பு பருத்தித்துறையைச் சார்ந்த இளைஞர்கள் மாஓவின் தத்துவ அடிப்படையில் மேகனும் பிலாக்கரின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. தங்கத்துரையுடன் தொடர்புகள் வைத்து இருந்தார்கள். 1980 கடைசிப் பகுதியில் இவ் அமைப்பின் முக்கியமான இருவரும் அரசினால் கைது செய்யப்பட்டார்கள். இவ் இருவரும் சிறையில் இருந்த காலத்தில் புளொட்டுடன் இணைந்து கொண்டார்கள். 1982 ம் ஆண்டு மேகன் விடுதலையாகி இந்தியாவுக்கு வந்து புளொட்டுடன் இணைந்து இயங்கினார். மற்றவர் சிறை உடைப்புக்குப் பின் இந்தியாவுக்கு வந்து புளொட்டுடன் இணைந்து செயல்ப்பட்டாலும் இவர் தன் கிராம மக்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை இந்தியாவில் இருந்து கொண்டு சென்று கொடுப்பார். இவர் ஒரு சிறந்த படகு ஒட்டியாகும். புளொட்டின் உட் கட்சிப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று எண்ணப்பாட்டுடன் தான் அவர் முரண்பட்டுக் கொண்டு தன் கிராம மக்களுக்கு உணவுப் பொருட்களைக் கொண்டு போகும் போது கடலில் வைத்துக் கொல்லப்பட்டார். மேகன் இந்தியாவில் வைத்துக் கொல்லப்பட்டார்.

2. ஈரோஸ் யாழ் மோலாதிக்க மேட்டுக் குடி இளைஞர்களால உருவாக்கப்பட்டது. இரட்ணசபாதி தலைவராக இருந்தார். இவருடன் பத்மநாவா, மகா உத்தமன், சால்ஸ், பாலசிங்கம், பிறேமச்சந்திரன் போன்ற பலர் அங்கம் வகித்தார்கள். இவர்களில் மகாஉத்தமன் தான் அன்று உலகத்தில் இயங்கிய விடுதலை அமைப்புக்களுடன் தொடர்பு உடையவர். இதனால்த் தான் ஈழ விடுதலை இயக்கங்களுக்கு பி. எல். ஓ வில் ஆயுதப் பயிற்சி கிடைத்தது.

ஈரோஸ் பிரதான குறிக் கோள்:- ஆயுதம் தூக்கிய அமைப்புக்கள் அழிந்து விடும், பின் நாம் தான் மார்க்சிய ரீதியான அரசியலை முன்னெடுப்பவர்கள் இதனால் நாம் தான் தமிழ்ப் பேசும் மக்களை ஆளத் தகுதியுடையவர்கள் எனறு எண்ணிச் செயல்ப்பட்டவர்கள். இதே கருத்துடன் தான் ஈ. புp. அர். எல. எஃவ் அமைப்பும் செயல்ப்பட்டது.

புலிகள் மற்றைய அமைப்புக்களை அழிக்கும் போது இவ் அமைப்பின் தலைமை பாரா முகமாக இருந்தது. (நாவாவும்-டக்கிலசும் விதி விலக்காகும்) ரெலோவை அழிக்கும் போது அதைத் தடுக்கும் படி இந்தியாவில் இருந்து பத்மநாவா ஈழத்தில் உள்ள தலைவர்களான பெருமாளுக்கும்- பிறேமச்சந்திரனுக்கும் அறிவித்தல் கொடுத்தார். ரெலோவை அழித்த பின்புதான் இராணுவத்துக்குப் பொறுப்பான டக்கிலசுவுக்கு அறிவிக்கப்பட்டது. இதனால்த் தான் டக்கிலஸ் அமைப்புடன் முரண்பட்டுக் கொண்டு வெளியேறி ஈ. பி. டி. பி. என்ற அமைப்பை உருவாக்கினார். இவர் தனது ஆயுதங்களை அற்புதத்திடம் ஒப்படைத்து விட்டுத்தான் வெளியேறி இந்தியாவுக்கு வந்தார்.

1970 ம் ஆண்டுக் காலப் பகுதியில் கல்வித் தரப்படுத்தலுக்கு எதிராக

யாழ் மாணவர்கள் ஒன்று இணைத்து மாணவர் ஒன்றியத்தை டேவிச்சன் தலைமையில் உருவாக்கப்பட்டது. சிறந்த பேச்சாளன்.

இவர்கள் அரசாங்கத்துக்கு எதிராக மாணவர்களை ஒன்று இணைத்துப் பல போராட்டங்களைச் செய்தார்கள்.

இம் மாணவ அமைப்பை ஈரோஸ் ஈழத்தில் தங்களுக்கு அரசியல் வேலை

செய்வதற்காக ஈழ மாணவப் பொது மன்றம் என்ற பெயரில் இயக்கினார்கள். இம் மாணவ அமைப்பில் இருந்தவர்களுக்கும் யாழ்ப்பாணத்தில் அன்று இயங்கிய மார்க்சிய இடது சாரிகளுடன் இறுக்கமான தோழமை ரீதியான தொடர்புகள் ஏற்பட்டது. இதனால் இவ் இளைஞர்களுக்குத் தங்கள் போராட்டங்களை முழுத் தமிழ்ப் பேசும் மக்களின் உரிமைப் போராட்டமாக மாற்றி சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தங்கள் போராட்டத்தை முன்  எடுக்க வேண்டும் என்று எண்ணப் பாட்டை எடுக்கும் போது ஈரோஸ் தலைமைக்குள் முரண்பாடுகள் தோன்றிவிட்டது.

இக் கால கட்டத்தில் ஈரோஸ்சின் முக்கிய தலைமையின் மத்தியில் கருத்து முரண்பாடுகள் உருவாகியது. இதன் விழைவு நாவாவும், பிறேமச் சந்திரனும் இலங்கைக்கு வந்து கோஸ் என்ற அமைப்பை ஈ. பி. ஆர். எல். எஃவ் என்று பெயரிட்டு நாவாவின் தலைமையில் உருவாகியது. நாவாவின் அரசியல் அறிவும், மனிதாபிமானமும் நாவாவைத் தலைவராக்கியது. இதனால் முழு மாணவர்கள் ஆதரவு கொடுத்தார்கள்.

தான் தலைவராக வர வேண்டும் என்று எண்ணத்தில் வந்த பிறேமச் சந்திரனுக்கு டேவிச்சனும் அவர் தோழர்களும் எடுத்த முயற்சி (நாவாவைத் தலைவர் ஆக்கியது) அவருக்குப் பேர் அதிர்ச்சியைக் கொடுத்தது.

பிறேமச் சந்திரன் இம் மாணவர் அமைப்பில் உள்ள ஒரு சில மாணவர்களை தனக்குச் சாதகமாக மாற்றி வைத்துத் தான் தலைவராக வர முடியும் என்று உறுதியாக நம்பி இருந்தார். (இவர்கள் தான் இன்று வெளி நாடுகளில் இருந்து  அவரை ஆதரிப்பவர்கள்.) இதை டேவிச்சனும் அவர் தோழர்களும் பிறேமச் சந்திரனின் எண்ணத்தை முறியடித்து நாவாவைத் தலைவர் ஆக்கினார்கள்.

டேவிச்சன் குழுவினர்கள் அவ் அமைப்பில் இருந்து வெளியேறுவதற்கு இது தான் மூலகாரணமாக அமைந்தது.

(ஈரோசின் மற்றைய தலைவர்கள் இரட்ணசபாபதி ஈரோஸ் தலைவராகவும், மகா உத்தமன் புளொட்டுடனும், சால்ஸ ரெலோவுடனும், பாலசிங்கம் புலிகளுடனும் இணைந்து இயங்கினார்கள்.)

இக் காலகட்டத்தில் ஈழ விடுதலை இயக்கம் என்ற பெயரில் முத்துக்குமாரசாமியின் தலைமையில் உருவாகி இதில் பெருமாள், புஸ்பராஜா போன்றவர்கள் இயங்கினார்கள். இதனால்த்தான் ஈழ விடுதலை அமைப்பும், ஈரோசும், இணைந்து செட்டியின் தலைமையில் புலோலி வங்கியைக் கொள்ளை அடித்தார்கள். இதனால் பலர் வெளிநாடுகளுக்குத் தப்பிப் போய்விட்டார்கள். பெயர் இல்லாமல் இயங்கிய தங்கத்துரையின் அமைப்பு ரெலோ என்ற பெயருடன் இயங்கத் தொடங்கியது. செவ் ஈழம் என்ற குறிக் கோளை முன்வைத்து இயங்கியது.

பெருமாள் பல்கலைக்கழகப் படிப்பை மேற் கொண்டார். அங்கு புலிகளின் முக்கிய பேச்சாளராக விளங்கினார். பட்டப்படிப்பைப் பெற்ற பின்

ஈ. புp. ஆர். எல. எஃவ் வின் முக்கிய பேச்சாளராகச் செயல்ப்பட்டார். கிழக்கில் அரசியல் வகுப்பு எடுக்கப்போனபோது அரசால் கைது செய்யப்பட்டார்.

சிறை உடைத்து சகல போராளிகளை வெளியில் கொண்டுவருவதற்கான பொறுப்பை ஒரு சிலரிடம் கொடுக்கப்பட்டது. இதில் நிர்மலாவைக் கொண்டுவரும் பொறுப்புப் பெருமாளிடம் ஒப்படைக்கப்பட்டது. அன்று நிர்மலாவுக்கும், பெருமாளுக்கும் புலிகளை ஆதரித்துச் செயல்ப்படும் போதும், மார்க்சிய மேதைத்தனத்தாலும் ஏற்பட்ட முரண்பாடுகளின் பலன,; நிர்மாலாவின் சிறைக் கதவின் திறப்புப் பெருமாளின் கையால் தொலைந்து போய்விட்டது.

ஈ. பி. ஆர். எல். எஃவ் மத்திய குழு அமைப்பதற்காக முழு அங்கத்தவர்களை அழைத்து ஒரு மகாநாட்டைக் கூட்டினார்கள்.

இதன் ஊடாகத் தாங்களின் கொள்கையை வகுத்து, மத்திய குழுவுவை அமைப்பதற்குமாக இம் மகாநாடு இடம் பெற்றது. இவ் அமைப்பை உருவாக்கிய பழைய தோழர்களைத் தான் மத்திய குழுவுக்கு நியமிக்க வேண்டும் என்ற தீர்க்கமான முடிவை எடுத்தார்கள். (அப் பழைய  தோழர்களின் போராட்டத் தன்மைகளையும், தியாகங்களையும், செயல்ப் பாடுகளையும் முக்கிய கவனத்தில் எடுக்கப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டது)  இம் மகாநாட்டில் எடுத்த தீர்மானங்கள் யாவும் மாயமாக மறைந்து போய்விட்டது. (நகல் கூட இல்லை-காணாமல் போய்விட்டது). இதனால் பெருமாள் மத்திய குழுவில் இடம் பெற்றார். இதை எதிர்த்து டேவிச்சன் குழுவினர் 50 பக்கம் கொண்ட அறிக்கையை வெளியிட்டுத் தங்கள் எதிர்ப்பைக் காட்ட வெளியேறினார்கள். இதனால் பிறேமச்சந்திரனின் நீண்ட கனவு நிறைவேறியது. (இத் தீர்மானங்கள் மாயமாக மறைந்ததற்குப் பிறேமச் சந்திரனின் ஆதரவாளர்கள் தான் மூல காரணமாகும்)

நாவாமீது இருந்த நம்பிக்கையும், விசுவாசமும் டேவிச்சன் குழுவின் தாராள வாதப் போக்கு பல உண்மைகளை இன்று வரை மறைக்கின்றார்கள்.

நாவா இந்தியாவிலும் பெருமாளும் பிறேமச்சந்திரனும் ஈழத்திலும் இவ் அமைப்பின் தலைமைதாங்கி இயக்கினார்கள்.

இன்று வரை ஈ. பி. ஆர். எல். எஃவ் அமைப்பில் இயங்கிய சாதாரணத் தோழர்கள் வரை தாராள வாதப் போக்கைக் கடைப்பிடிக்கின்றார்கள் எனபதற்குப் பல மத்திய குழு உறுப்பினர்கள் இருந்து பிரான்சில் உள்ள இவ் அமைப்பின் கிளைக்குப் புஸ்பராஜாவைத் தலைவராகப் பெருமாள் நியமித்தது நல்ல உதாரணமாகும்.

(புஸ்பராஜா யார்? அவர் அரசியல் என்ன ஈழப் போராட்டத்தில் எனது சாட்சி என்ற புத்தகத்தில் அவர் கொடுத்த தகவல்கள் சம்பந்தப்பட்ட சகல விடையங்களுக்கும் முழு விமர்சனத்தைப் பின்னர் வைக்கின்றேன். இவர் மீது எனக்குக் கால்புணர்ச்சி என்று கருதினால் நான் அதற்குப் பொறுப்பு அல்ல, கவலைப்படவில்லை. (புஜ்பராஜா தனக்கு சில நபர்கள் தான் தகவல்கள் தந்ததாகக் கூறியுள்ளார். இது உண்மையா என்று அறிந்த பின் அவரைப்பற்றிய கட்டுரை முழுமையாக வெளிவரும்).

வரலாறுகள் திரிக்கப்படக் கூடாது என்பதே எனது எண்ணம். விமர்சனங்கள் இருந்தால் உங்கள் உண்மையான பெயரில் எழுதுங்கள். மொட்டைக் கடிதங்களுக்கு நான் உணர்ச்சிவசப் படுபவன் அல்ல. கரித்துண்டில் நீங்கள் எழுதும் விமர்சனத்தைப் பார்க்கும் போது ஒருநபர் மூன்று புனைப் பெயர்களில் எழுதுகின்றீhகள்;. நீங்கள் எழுதும் சகல விமர்சனங்களிலும் நீங்கள் பாவிக்கும் சொற் பதங்கள் எல்லா விமர்சனங்களிலும் பாவிக்கப்படுகின்றது. இதனால் உங்கள் விமர்சனம் உங்களை யார் என்று அடையாளம் காட்டிக் விடுகின்றது.).

யாழ்ப்பாணத்து மேலாதிக்க மேட்டுக்குடிச் சிந்தனை கொண்டவர்கள் அமைப்புக்கள், இயக்கங்கள் அனைத்தின் (காந்தீயம் விதி விளக்கான (அமைப்பாகும்) மற்றைய அமைப்புக்கள் மத்தியில் தலைமையைக் கைப்பற்றும் போட்டி இடம்பெற்றது.

இப் போட்டி கொலைகளில் முடிந்துள்ளது. இத் தலைமைப் போட்டியில் தலைமைகு விசுவாசமாக இருந்த அனைவரும் இன்றும் முட்டி மோதுகின்றார்கள். இவர்கள் தங்களை மனித நேயம் உள்ளவர்களாகவும், ஜனநாயக வாதிகளாகவும் நிருபிக்க மற்றவர்கள மீது பழிகளைப் போட்டுத் தப்பிக்கப் பார்க்கின்றார்கள். தங்கள் பதவிக்காக, கௌரவத்துக்காக, மதிப்புக்காக, சமூக அந்தஸ்த்துக்காக இவ் அடவடித்தனமான (கொலை உட்பட) செயல்களை தூண்டிவிட்டவர்கள். தலைமை அமைதியாக இருந்தாலும் இவர்கள் ஒத்து ஊதி அடாவடித் தனத்தைத் தூண்டுவார்கள். இல்லாவிட்டால் தலைமையின் பெயரால் இந்த அடவடித்தனத்தைச் செயற்படுத்துவார்கள். தலைமை என்ன செய்வது என்று திகைத்து நிற்கும் போது தொடர்ச்சியான அடாவடித்தனத்தைச் செயவர்கள்.

உதாரணமாக தலைமைக்கு நாவாவும், அடவடிதனத்தின் செய்பவராக பிறேமச்சந்திரனையும் அவர் தோழர்களையும்  கூறலாம்.

தங்கள் படிப்பை வைத்துக் கொண்டு (சமூக அரசியலுக்கும் சம்பந்தம் இல்லாத படிப்பு) இவர்கள் மத்தியில் ஊடுவிக், குட்டையில் குழப்பி (தங்களுக்கு விரும்பும் மீன்களை) மீன்களைப் பிடிப்பார்கள். இதற்குப் பெருமாலும், விக்கினேஸ்வரனும் நல்ல உதாரணமாகும். இப்படியான செயல்ப்பாடு வெளி நாட்டில் உருவாகிய அமைப்புக்களிலும் உண்டு. (பணத்துக்குப் பணம், சுகபோக வாழ்வும் கிடைக்கின்றது.).உதாரணமாக கைலாசபதி மாற்று இலக்கியம் எனற் போர்வையில் பல சிறந்த தமிழ் இலக்கியவாதிகளை ஓரம் கட்டினார். இதில் பெரிதாகப் பாதிக்கப்பட்டவர்கள் எஸ் பொ வும், மகாகவியும் தான்.

மேற் கூறப்பட்ட சம்பவங்களை வைத்து மறைக்கப்பட்ட உண்மைகள் எனறறு தொடரை எழுதுகின்றோன்.

ஆரம்பத்தில் சுயநிர்ணய உரிமை என்ற கொள்கையுடன் இயங்கிய அமைப்பு மத்திய குழு உருவான பின்பு பிரிந்து போகக் கூடியது சுய நிர்ணய உரிமை என்று கொள்கையை இவ் அமைப்பில் உள்ள் மார்க்சிய மேதைகள் வகுத்தார்கள். இதனால் லெனினினால் வரைவு செய்யப்பட்ட சுயநிர்ணிய உரிமை என்ற சொற் பதத்துக்குப் புதிய சொற் பதமாகப் பிரிந்து போகக் கூடிய சுயநிர்ணய உரிமை என்று கூறிப் புதிய அர்ததத்தை உருவாக்கினார்கள். இதன் மூலம் தங்களை இன ரீதியான பிரிவினை வாதிகள் என்பதைக் கூறாமல் கூறினார்கள். இதனால்த்தான் அனுரதபுர நிகழ்வுக்குப் பின்பும் புலிகளைத் தங்கள் கூட்டணியில் இணைத்துக் கொண்டார்கள்.

இனவாதம் இல்லாமல் இயங்கிய பேரைவை, விசுவின் பி எல். எஃவ் ரி, புளொட், போன்ற பல அமைப்புக்களை ஓரம் கட்டினார்கள். (ரெலோ அமைப்பு உள்ப்படப் பல அமைப்புக்கள் இனவாத அமைப்புக்கள் அல்ல.)

சகல அமைப்புக்களையும் ஒன்று இணைப்பதன் மூலம் ஒரு மார்க்சியச் சிந்தனை கொண்ட தலைமை உருவாகும் என்று சந்ததியார் கூறிய விடையம் அமிர்தரைச் சிந்திக்கத் தூண்டியது இதன் விழைவு முக்கிய அமைப்புக்களான புலிகள், ஈரோஸ், ஈ. பி. ஆர். எல். எஃவ், ரெலோவையும் ஒன்று இணைத்து ஒரு கூட்டணியைப் பெருமாளைத் தலமையாக்கி உருவாக்கினார்கள்.( தமிழ்த் தேசிய விடுதலை முன்னணி யாகும்)

பின் புலிகள் மற்றைய இயக்கங்களை அழித்துத் தடை செய்தபின்பும் கூட புலிகளை இக் கூட்டு முன்னணியில் இருந்து வெளியேற்றப்படவில்லை. பிரபாகரன் தான் இவர்களை வெளியேற்றி விட்டதாக அறிக்கை விட்டுத் தடைசெய்தார்.

பின் மீண்டும் மற்றும் சகல இயக்கங்களை ஒற்றுமையாக்கும் படி இந்தியா பணித்தது. (சந்ததியார் சகல இயக்கங்களையும் ஒற்றுமையாக்கும் பணியில் ஈடுபட்டார். அவர் கொலை செய்யப்பட்ட பின் இந்தப பணியை விசுவானந்தன் செயற்படுத்தினார்.) இதை மையமாக வைத்து முதலாவது கூட்டத்தைப் (சகல இயக்கங்களையும் அழைத்து) பாதர் பிற்ற பொன்கலன் வீட்டில் (இந்தியாவில்) கூட்டப்பட்டது. பழைய விடையங்களை விவாதிக்கப்பட்டபோது இவைகளை இனி விவாதிப்பதில் எந்த பிரயோசனமும் இல்லை, ஒற்றுமைக்குப் பங்கம் விழைவிக்கும் என்று அமிhதரும், மாவையும் கூறினார்கள். அந் நிகழச்ச்சிகளுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்கள்.

இதன் பின் ஒற்றுமையாக்கும் கூட்டங்கள் மாதத்துக்கு 4 முறையும், ஒவ்வொரு இயக்கத்தில் இருந்தும் 3 நபர் அங்கம் வகிக்க முடியும் என்று தீர் மானம் எடுக்கப்பட்டது. நடைமுறைப் படுத்த ஈ.பி. ஆர். எல். எஃவ், ரெலோ, ஈ. என். டி. எஃவ்  அமைப்புக்கள் பொறுப்பு எடுத்தார்கள்.

2வது 3வது கூட்டங்கள் ஹெட்டல் சேலாவில் இடம் பெற்றது.

புளொட் பார்வையாளர்களாக வருவதாகவும் ஒப்புக் கொண்டார்கள். புலிகள் பங்கு பெற மாட்டோம் என்று உறுதியாகக் கூறிவிட்டார்கள். சில தனிப்பட்ட நபர்கள் பார்வையாளராக வந்தார்கள் இவர்களில் ஒருதர் தோழர் எங்கல்ஸ் கூறிய சில விடையத்தைக் கூறும் போது இடைமறித்து எங்கள் இயக்கத்தில் இந்தப் பெயர் உடையவர் இல்லை என்று முக்கிய அமைப்பின் தலைவர் ஒருவர் கூறினார்.

தமிழ் மக்கள் புரட்சிகர முன்னணி என்ற பெயரும், ஆயுதக் குழுவுக்கு செம் படை என்றும் தீர்மானிக்கப்பட்டது.

3வது கூட்டத்தில் கொள்கை வகுக்கும் கூட்டமாக அமைந்தது மதிய பேசனம் முடிந்த பின் இது இடம் பெற்றது. பெருமாளும், அற்புதமும் மேசையில் நித்திரையாகி விட்டார்கள். ரெலோ சால்ஸ் தமிழ் ஈழம் தான் என்ற கொள்கையை முன் வைத்துத் தீர்மானமாக நிறைவேறியது. சகல இயக்கங்களின் தலைமைகள் கையொப்பம் இட்டு அறிக்கையை வெளியிடுவதாகத் தீர்மானிக்கப்பட்டது.

இது ஈ. பி. ஆர். எல. எஃவ் பின் அடிப்படைக் கொள்கைக்கு முரண்பாடான தீர்மானம் என்பதால் நாவா இரவு இரவாகக் கூட்டத்துக்கு வந்த சகலருடனும் கதைத்து அடுத்த நாள் கூடிப் பிரிந்து போகின்ற சுய நிர்ணய உரிமை என்று தீர்மானம் எடுத்து அறிக்கையை வெளியிட்டார்கள். இத்தருணத்தில் இந்தியா முக்கியமான அமைப்புக்களுக்கு ஆயுதம் வழங்கப்பட்டது.. இவ் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு போன இயக்கத்தின் தோழர்களைப் புலிகள் மன்னாரில் வைத்துக் கொன்றார்கள். இவ் ஆயுதங்களைத் தங்கள் தோழர்களின் பாதுகாப்புக்குப் பயன்படுத்த விசு ஆயுதங்களுடன் யாழ் சென்றார் அவரும் கொலை செய்யப்பட்டார்.

விசுவின் கொலையுடன் ஒற்றுமையாக்கும் விடையம் கேள்விக் குறியாகியது. நாவாவின் கொலை அதை முற்றாக நிறுத்தியது. சகலரும் இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்கள் டக்கிலஸ இலங்கைக்குச் சென்று (ஈ. பி. டி. பி) தமிழ்ப் பேசும் மக்களின் உரிமைக்கான போராட்டத்துக்கான அரசியலை முன் எடுத்தார்.

இந்தியாவின் சமாதானப் படையின் உதவியுடன் ஈ. பி. ஆர். எல். எஃவ் மும்,

ஈ. என். டி. எல். எஃவு ம் வட கிழக்கு இணைந்த மாகாண நிர்வாக அலகைத் தேர்தல் மூலம் கைப்பற்றினார்கள். (இவர்களின் செயல்ப்பாட்டைப் பின் பார்ப்போம்).

மாகாண சபையின் முதல் அமைச்சராக நாவாவைப் போடலாம் என்று இந்தியா கருதிய போது அவர் இந்தியாவில் இருப்பதாலும் (நீண்டகாலம் யாழ்ப்பாணத்தில் இல்லாத படியால்) தமிழ் மக்களுக்கு அவரைத் தெரியாது எனவே பெருமாளை முதல் அமைச்சராக்கும் படி பிறேமச்சந்திரன் இந்தியாவைக் கேட்டுக் கொண்டார். (நாவா உண்மையான மார்க்சிய வாதி அத்துடன் நாவாவை விட பிறேமச் சந்திரன் இந்தியாவுடன் நெருங்கிய தொடர்பு உடையவராக விளங்கினார்.) பின் இந்தியப் படைகள் வெளியேறிய கையுடன் பெருமாளும் இந்தியாவுக்கு வந்து விட்டார். அப்போது ஈழத்தில் ஈ. பி. ஆர். எல். எஃவ் ன் தலைவராகப் பிறேமச்சந்திரன் இயங்கினார். (புலிகளின் ஆதரவுடன்). இவர் சுகு என்ற தோழருக்குப் பல நெருக்கடிகளைக் கொடுத்தார். (சுகு ஒரு சிறந்த மார்க்சிய வாதி).

இவ் இயக்கம் உடைந்து பெருமாள் அணி என்றும், நாவா அணி என்றும், பிறேமச்சந்திரன் அணி என்றும் உருவாகியது. இதனால் பெருமாள் அணி, அணியுடன் சுகு இணைந்து கொண்டார். (சுகு டக்கிலஸ் ஆயதப் பணியுடையவர் அவருக்கு எந்த அரசியலும் தெரியாது என்று தப்புக் கணக்குப் போட்டுவிட்டார்) பிறேமச் சந்திரன் இலங்கை அரசியல்ச் சட்டத்தைப் பயன் படுத்தி ஈ. புp. ஆர். எல். எஃவ். வை கைப்பற்றினார்.

குறிப்பு:- நாவா இந்தியாவில் இருந்த படியால் இவ் அமைப்பின் தலைமைப் பதவியை பெருமாள் கைப்பற்றினார். பின் பெருமாள் இந்தியாவில் இருக்கும் போது பிறேமச் சந்திரன் இவ் அமைப்பைக் கைப்பற்றினார்.

டக்கிலஸ் தன்னுடன் வந்த தோழர்களை அரவணைத்து ஈ. பி. டி. பி. அமைப்பை வளர்த்து எடுத்தார்.

ஈ. பி. ஆர். எல். எஃவ் அமைப்பின் இடம் பெற்ற நிகழ்வுகள் ஆகும். இருந்தாலும் இவ் அமைப்பில் இருந்த பழைய தோழர்கள் அப்பாவிகளாகவே இருக்கின்றார்கள். நாவா மீதான விசுவாசம் பல தோழர்களைத் தாராளவாதத்துக்குக் கொண்டு சென்றது. இதற்கு மகேஸ்சையும்;, டேவிச்சனையும், புஸ்பராஜாவைத் தலைவராக ஏற்று பிரான்சில் உள்ள தோழர்களையும் உதாரணமாகக் கூறலாம்.

பெருமாள் முதல் அமைச்சராக இருந்த போது ஆலோசகர்ராக் இருந்தார் விக்னேஸ்வரன். திருமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட னுச. ஞானி (ரெலோ ஆதரவாளரும், பல் வைத்தியர்) மாகாண நிhவகத்து சீர்கேட்டை விமர்சித்தபடியால், பெருமாளின் பணிப்பின் பெயரில் விக்கினேஸ்வரன் ஞானியுடன் சமாதானம் பேசுவதற்குப் போனார். அதன்பின் னுசு ஞானிக்கு என்ன நடந்தது என்று உறுதியாகவோ அல்லது தகவல்களாகவோ கூற முடியவில்லை. அதை அவ் அமைப்பில் உள்ள பழைய தோழர்கள் தான் துணிவுடன்  கூற வேண்டும்.

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Comments are closed.