மறைக்கப்ட நிகழ்வுகள் – 1

உலகத்தில் அரசிறல் அதிகாரங்டகள் யாவும் துப்பாக்கிக் குழாயில் இருந்து தான் பிறந்தது. யாழ் உயர் மேலாதிக்க மேட்டுக் குடியினர்னள் இந்து மதத்துக்கு (ஆரிய காலச்சாத்துக்) உடாக அதிகாரங்களை உருவாக்கினார்கள். துப்பாகின் வழிமையை விட இந்து மத கோட்ப்பாடுகள் வழிமைமிக்கது.

சாதாரண உழைக்கும் ஏழை மக்களை (பாட்டாளி வர்க்கத்தை) அடிமையாக வைத்து இருப்பதற்கு உருவாக்கப்பட்டது தான் அதிகாரங்கள்.

சகல ஈழ விடுதலை அமைப்புகளின் தலைமைகளின் தனிப்பட்ட அணுகுமுறையும், அபிலாசைகளும், அவர்களின் தவறான போராட்ட அணுகு முறையும், போராளிகள் அமைப்பின் மீது கொண்ட விசுவாசமும் (அவ்த் தலைமைகள் பிழையாகக் போகின்றார்கள் என்று கருதிச் செயல்ப்பட்டமையும்) தான் அவ் அமைப்புக்களை இயங்கவிடாது முடக்கியது.

இங்கு குறிப்பிடப்படும் சம்பவங்கள் யாரையும் புண்படுத்தும் நோக்கத்துக்காகக் குறிப்பிடப்பட வில்லை. ஒவ்வொரு அமைப்பில் இயங்கிய சாதாரண போராளிகளின் உயிர்த் தியாகங்களை நான் மதிக்கின்றேன். நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் சார்ந்த அமைப்புக்களைச் சுய விமர்சனம் செய்து பாருங்கள் ஜதார்த்தம் புரியும். வரலாற்றல் மறைக்கப்பட்ட சில நிகழ்வுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகின்றேன். இவைகளை;த் தனி மனித விமர்சனத்துக்கு உட்படுத்த விரும்பவில்லை. இவைகள் உண்மையானவை ஆனால் ஆதாரமற்றவை.

1. முதலாவது ஈழப் பிரகடனம் 1956 ம் ஆண்டு வவுனியா எம்பி யாக

இருந்து சுந்தரலிங்கத் (அடங்காத் தமிழன்) தால் பிரகடினப் படுத்தினார். இவர் நாட்டுத் துப்பாக்கியைச் சேகரித்து வவுனியா, மலையத் தமிழ்

இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி கொடுத்தார். இதற்குப் பிரித்தானியர் காலத்தில் இராணுவப் பிரிவில் கடைமையாற்றிய பறங்கி இனத்தைச் சார்ந்தவர் உதவியாக இருந்தார்.

இவர் லண்டனில் படித்த காலத்தில் அப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவராக இருந்தவர். அதன் பொதுச் செயலாளராகப் பண்டாரநாயக்கா (இலங்கை பிரதம மந்திரியாக இருந்தவர்) இருந்தார். பொருளாளராக மைமில்லர் (லண்டன் பிரதம மந்திரியாக இருந்தவர்) இருந்தார்.

இவர் அதே பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகக் கடமையாற்றியவர். இதனால் லண்டனில் உள்ள பல அரசியல்வாதிகள் இவரின் மாணாக்கர்கள் ஆகும். குறிப்பாக 2 வது மகாராணியின் குருவும் ஆவார். இதனால் அதி செல்வாக்கு உள்ள மனிதர்களாக விளங்கினார். இவர் நிதி அமைச்சராக இருந்த காலத்தில் குடை இறக்குமதி செய்ததில் இலங்கைக்கு பல கோடி ரூபாக்களை அன்னிய மூலதனமாகப் பெற்றுக் கொடுத்தவர். இவருடைய மூத்த சகோதரன் தான் இலங்கையின் முதல் சேனாதிபதி (இன்று ஜனாதிபதி) யாகும்.

இவர் ஒரு ஈழ எல்லைகளைக் கொண்ட வரைபடத்தை வெளியிட்டார்.

இவ் வரைபடம் தான் 1970 ம் ஆண்டுக்குப் பின் உருவான ஈழ

விடுதலை அமைப்புக்கள் தங்கள் வரைபடங்களாக பயன்படித்திக்

கொண்டார்கள்.(புளெட் என்ற அமைப்பு தங்கள் போட்டம் தான் எல்லைகளைத் தீர்மானிக்கும் என்று கூறினார்கள்.

விசுவானந்த தேவனும். பேரவையும், இலங்கைப் புரட்சியை மையாமாக வைத்து ஈழ விடுதலை அமைப்பை உருவாக்கியவர்கள். அன்று சட்டக் கல்லூரி மாணவர்களால் உருவாக்கிய அமைப்பு (பெயர் தெரியாது) இதெ கௌ;கையுடன் தான் உருவானது.)

நோர்வை நாட்டில் ஈழக் கண்காட்சி ஒன்று இடம் பெற்றது. இவ் எல்லையைத் தீர்மானிக்கும் அவ் வரை படம் வைக்கப்பட்டு இருந்தது. கண்காட்சியைப் பார்க்க வந்த நோர்வே நாட்டுப் பிரஜை ஒருவர் இலங்கையில் யார் சிறுபான்மை இனத்தவர்கள் (சிங்களவரா அல்லது தமிழர்களா) என்ற கேள்வியை முன்வைத்தார். இப் பகுதிக்குப் பெறுப்பாக இருந்த பழைய இடதுசாரி நபர் இவ் விடத்தில் இருந்து நழுவிச் சென்றாராம்.

அந்த வரை படம் சிங்கள மக்களைச் சிறுபான்மை இனமாகச் சிந்திக்க வைத்தது.

1958 ம் ஆண்டு இடம் பெற்ற இனக் கலவரத்தின் போது அனுராதபுரத்து இனவாதக் குண்டர்கள்; (1940 ஆண்டு டி. எஸ் சால் குடியேற்றப்பட்ட மக்கள்) வவுனியாவை நோக்கி வரும் போது ஈரப்பெரிய குளத்தடியில் (வவுனியாவின் எல்லைப் புறத்தில்) வைத்து முன்னேறவிடாது தடுத்தார். 100 க்கு மேலானப் பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள்.

இது விடையமாகப் பாராளுமன்றத்தில் பண்டாரநாயக்கா சுந்தரலிங்கத்தைப் பார்த்து மரம் வவுனியாவில் சிங்களவர்களைச் சுட்டது யார்? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு சுந்தரலிங்கம் மரம் அதன் கொப்புக்கள், கிளைகள், இலைகள் தான் சுட்டதாகப் பதில் கூறினார். சுந்தரலிங்கமும்- பண்டாரநாயக்காவும் மிக நெறிங்கிய நண்பர்களாக இருந்தபடியால் ஜே. ஆறும், இராஜரட்னாவும் பண்டாரனாயக்கா தான்  சிங்கள மக்களைச் (யு. என். பி. சார்ந்தவர்கள்) சுடுவித்தார் என்று  பாரளுமன்றத்தில் கூச்சல் இட்டார்கள். இந்தப் பிரச்சனையை வளர்ர விடாது அன்று இராணுவத் தளபதியாக இருந்த பறங்கி இனத்தைச் சார்ந்த இலங்கை இராணுவ அதிகாரி,  நாம் தான் இனக் கலவரத்தை அடக்கச் சுட்டதாகவும், இதில்  கொல்லப்பட்டவர்களில் தமிழர்களும் அடங்குவார்கள் என்று பகிரங்கமாக அறிக்கைவிட்டார். சுந்தரலிங்கத்தின் ஈழக் கோரிக்கை வளர்ச்சி பெற்றால், தாங்கள் ஆதிகாரங்கள் பறி போய்விடம் எனபதாலும், மீண்டும் யு. என். பி.  ஆட்சிக்கும் வர முடியாது என்று கருதிய யாழ் உயர் மேலாதிக்க வாதிகளன (ஜி. ஜி.- செல்வா குழுவினர்கள்)இரு பெரும் தலைவர்களும் இணைந்து, வவுனியா- யாழ்ப்பாணத்தான் என்ற பிரதேசவாதத்தை எழுப்பி சுந்தரலிங்கத்தை அரசியலில் இருந்து ஒதுக்கி வைத்தார்கள். (இன்றையத் தமிழ் தலைமையின் நிலைமைகளையும், யு. என. பி. ன் நிலையையும் அவதானித்தால் அந்த உண்மை புரியும்) -ஒரு கத்தை வைக்கலுடன் வவுனியா மக்களைத் தன்வசப்படுத்த முடியும்-என்று சுந்தரலிங்கம் கூறியதாகப் பொய் பிரச்சாரத்தைச் செல்வா- ஜி. ஜி.- வன்னியசிங்கம் போன்றத் தமிழ் தலைமைகள் மேடைமேடையாகப் பொய்ப் பிரச்சாரம் செய்தார்கள்.

ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பக் கூறினால் அது உண்மையாகிவிடும். இதற்குப் பெயர் தான் பேச்சுச் சுதந்திரம்.

இப்படியாகப் பேச்சுச் சுதந்திரமும், எழுத்துச் சுதந்திரமும் இன்று வரை நடைமுறையில் உள்ளது. உலகத்திலேயே இப்படியான சுதந்திரங்களைப் கையான்டவர்கள் ஆரிய கலாச்சாரத்தைப் பின் பற்றிய ஹிட்லரும், யாழ் மையவாதிகளும் ஆகும்.

சுந்தரலிங்கம் வவுனியாவில் சகல வசதிகளும் கொண்ட ஒரு விவசாயப் பல்கலைக்கழகத்தை ஆரம்பிப்பதற்காக 1000 ஏக்கர் காணியை 1958 ம் ஆண்டு பெற்றுக் கொண்டார். (நெடும் கோணியில்)- (1977 ம் ஆண்டுக்கப் பின் அக் காணியில்த் தான் நவர் என்ற பண்ணையைக் காந்தீயம் உருவாக்கியது. இங்கு கட்டுப்பெத்தை பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் அங்கு வந்து குடியேறிய மக்களுக்குப் பல உதவிகளைப் புரிந்தார்கள்).

இதே காலகட்டத்தில் யாழ் பல்கலைக்கழத்தை ஆரம்பிப்பதற்கு எஸ். ஏ. டேவிட் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுத் திருகோணமலையில் நிலம் வாங்கப்பட்டுக் கட்டிட வேலைகள் ஆரம்பமாகியது. கட்டிடப் பொருள்கள் இந்தியாவில் இறக்குமதி செய்ய அரசின் அனுமதியும், இழுவைப் படகும் வாங்கப்பட்டது. (பண்டாரநாயக்கா ஆட்சிக்கு வந்த பின் பாடசாலைகள் உட்பட சகல நிறுவனங்களையும் அரசு உடமையாக்கப்ட இருந்த காலகட்டத்தில் தமிழ்ப் பகுதியில் ஒரு பல்கலைக்கழகத்தை ஆரம்பிக்க வேண்டிய சூழல் உருவாகியது.)

பண்டாரநாயக்காவின் மரணம் தமிழ் பல்கலைக்கழக வேலைகள் தடைப்பட்டது. சிறமாஒவுக்குப் பின் யு. என். பி. ஆட்சிக்கு வந்தபடியால்

இவ் இரு பல்கலைக்கழக அனுமதி ரத்துச் செய்யப்பட்டது. இந்த ரத்துக்கு மூலகாரணமாக இருந்தவர்கள் இந்த யாழ் மேலாதிக்க மேட்டுக் குடி அதிகாரத் தலைமையாகும்.

பாடசாலைகள் தேசியமயக்கியதன் பின்புதான் சாதாரண ஏழை மக்களின் பிள்ளைகள் பாடசாலை போக முடிந்தது. (மாதம் ஒன்றுக்கு100 ரூபா பணம் செலுத்த வேண்டிய நிலை மாறி 3 மாதத்துக்கு ஒருதரம் 12 ரூபா செலுத்தும் நிலை உருவாகி , அதன் பின் முதல் தரத்தில் இருந்து பல்கலைக்கழகம் வரை இலவசக் கல்வித் திட்டங்கள் உருவாகியது. இதன் பின் உருவான தரப்படுத்தல் பின் தங்கிய சாதாரண ஏழைத் தமிழ் மக்களின் பிள்ளைகளுக்கு உயர் கல்விகற்கும் வாய்ப்பினைப் பெற்றுக் கொடுத்தது.)

இந்தத் தேசியமயமாக்குவதற்கு எதிராகவும், தங்களின் ஏகாபத்திய அடிமை விசுவாசத்தை நிருபிப்பதற்கும் லண்டன் மகாராணிக்கு அன்று தந்தி அடித்தவர்கள் இந்த யாழ் மேலாதிக்க மேட்டுக் குடி அதிகாரத் தலைமையாகும்.

உலக அங்கிகாரம் கொண்ட பேராதனைப் பல்கலைக்கழத்தில்ப் படித்தால்த்தான் தம் பிள்ளைகள் வெளிநாடுகளில்ச் சென்ற சுபோகமாக வாழ முடியும் என்ற அபிலாசையால்த் தமிழ்ப் பகுதியில் பலகலைக்கழகம் அவசியம் இல்லை என்றும், தேவையில்லை என்றும் கூறிஎதிராகச் செயல்ப்பட்டார்கள்.

ஒரு நபர் அன்று வாங்கிய கட்டிடத்தில்க் கண்ணாடித் தொழிற்சாலையாக உருவாக்கினார். (திருமலையில). மற்ற நபர் இறக்குமதி அனுமதியைப் பயன்படுத்தி அந்த இழுவைப் படகு மூலம் கள்ளக்கடத்தல் செய்தார். இதனால் டேவிட் விரக்தியடைந்து மீண்டும் வெளிநாடு சென்றார்.

சுயநலமிக்க யாழ்ப்பாணப் பிசாசுகளுடன் எந்தப் பொது வேலையும் செய்ய முடியாது என்று டேவிட் அடிக்கடி கூறுவதை அவதானிக்கலாம்.

இனக் கலவரம் உருவாகிய காலகட்டத்தில் (1977 ம் ஆண்டு) டேவிட் இங்கைக்குத் திரும்பி வந்து, தான் உழைத்த பணத்தை மூலதனமாகப் போட்டுக் காந்தீயம் என்ற அமைப்பை உருவாக்கினார். இவருக்குத் தோழ் கொடுத்தவர்கள் னுச. இரசசுந்தரமும், சந்தியும் மாகும். இந்தக் காலகட்டத்தில் யாழ் மேலாதிக் அதிகாரத்துக்கு எதிராகக் கடுமையான போக்கை கொண்ட சுந்தரமும், சந்ததியாரும் அவர்களது நண்பர்களும் இணைந்து கொண்டார்கள். இதன் பின் வெளிநாட்டுத் தமிழர்களின் உதவியும், வெளிநாட்டு உதவிகளும் கிடைத்தது.

அன்றைய காந்தீயத்தின் பணி, அன்றைய அரசியல் சுழலின் படி10 வருடங்களுக்கு மேல் செயலாற்ற முடியாமல்ப் போகும் என்பதாலத், தமிழ்ப் பேசும் மக்களுக்கு சரியான தலைமை அவசியத்தை உணர்ந்து கிரரமம் கிராமக அறிவியல்க் கருத்தரங்குகளை நடத்தினார்கள் (முக்கியமானவர்கள் சுநதரம், சந்ததியார், இரசசுந்தரம், தங்கராஜா).

மலையகத் தமிழ் மக்களுக்கு ஏகாதிபத்திய முதலாளித்து வாதிகள் செய்த கொடுமைகளை, ரீ என்ற தகவல் கூறும் படத்தை லண்டன் பட நிறுவனத்துடன் இணைந்து தயாரித்தார்கள்.

லண்டனில் பல இடங்களில் காட்டப்பட்டது. இதனால் லண்டன் மக்கள் தாம் குடிக்கும் ரீ மலையகத் தமிழ் மக்களின் இரத்தம் என்று எண்ணவைத்தது. இதனால் ஆங்கிலேயர்கள் பல போராட்டங்களை லண்டனில் நடத்தினார்கள். இதன் அழுத்தம் காரணமாக 1984 ம் ஆண்டு ஜே. ஆர். 90,000 மலையகத் தமிழர்களுக்குப் பிரஜா உரிமைவளங்கினார். இதைத் தொண்டைமான் (மந்திரியாக இருந்தபடியால்) தனக்குச் சாதகமாக மாற்றிக் கொண்டார்.

இதனால் இடது சாரிகளின் பிழையான தொழிற் சங்க அணுகுமுறை தொண்டமானை தலைவன் என்ற நிலைக்கும், யு, என். பி. யை மலையகத்தில் ஒரு ஸ்த்திரத் தன்மை அடையவைத்தது.

இனித் தமிழ்ப் பேசும் மக்களுக்குப் புதிய அமைப்புத் தேவை இல்லை என்று கருதிய (பல ஈழ விடுதலை அமைப்புக்கள் உருவாகியுள்ள நிலையில) சகல அமைப்புக்களையும் ஒன்று இணைக்க வேண்டும் என்று சந்ததியார் பாடுபட்டார். ( அவர் இறக்குமட்டும் இவ் எண்ணத்தில் இருந்து மாறவில்லை)

சகல அமைப்புக்களுடனும் கதைத்த சம்மதம் பெற்ற பின் புலிகளுடன் பேசுவதற்காக 1977 ம் ஆண்டு இந்தியா சென்று இருந்தார்.

இவ் எண்ணத்துக்கு அமிர்தர் தடையாக இருந்தார். இதனால் பிரபாகரன் சந்ததியாரை வீட்டுக் காவலில் வைத்தார்.

பிரபாகரனின் அடாவடித் தனம் உமாவை நல்லவனாகச் சித்தரித்தது.

பிரபாகரனுக்கும் உமாவுக்கும் ( உமா அன்றைய புலிகளின் தலைவன்) இடையில்ப் பெண் விடையமாக முரண்பாடுகள் உருவாகியது. சந்ததியாருக்கும், உமாவுக்கும் பிரபாகரன் மரண தண்டனை வளங்கினார். சுந்தரத்தின் மூலம் நிறைவு செய்வதாகத் தீர்மானிக்கப்பட்டது. சுந்தரம் சாதுரியமாகச் செயல்ப்பட்டு உமாவையும், சந்ததியாரையும் காப்பாற்றி இலங்கைக்கு அனுப்பி வைத்தார். பின் தனது நண்பர்களுடன் புதிய பாதை என்ற பத்திரிகைக் குழுவாக இலங்கைக்கு வந்து யாழ் மேலாதிக்க மையவாதத்துக்கு எதிராகப் பத்திரிகை வெளியிட்டார். அத்துடன் காந்தீயத்துடன் இணைந்து செயல்ப்பட்டார்.

உமா தனியாகவும், சந்தரம், கண்ணன் போன்றவர்கள் புதிய பாதைக் குழுவாகவும், பிரபாகரன குழு ஆயுதத்துடன் ரெலோவுடன் சரண் அடைந்தார்கள்

( பிரபாகரனைத் தங்கத் துரை இணைத்ததைஎதிர்த்தவர் ஒப்பிறே தேவன். இது விடையமாக அவர் எழுதிய நாற் குறிப்பை தேடிப் பாருங்கள்.)

1929 ஆண்டுக்குப் பின் தமிழத் தலைமைத் தொழிலாளர் ஐக்கியத்துக்கும், வர்க்க ஒற்றுமைக்கும், தமிழ் மக்களின் அடக்கு முறைகளுக்கு எதிராகவும் அயராது உழைத்தவர்கள்; யாழ் மாணவர் காங்கிரஸ் தலைவர்களாகும்.

1960 ம் ஆண்டுக்குப் பின் தமிழ் மக்களின் சாதி ரீதியான அடக்கு முறைகளுக்கு எதிராகவும், பாட்டாளிவர்க்க ஒற்றுமைக்காகவும் அயராது உழைத்தவர்கள் கார்த்திகேசன் மாஸ்ரர், வி. ஏ. கந்தசாமி, மு. நிந்தியானந்தன் போன்றவர்களாகும் முக்கிய குறிப்பு:-சாதி அடக்கு முறைப் போராட்டத்தில் முன்னணி வகித்தவர்கள் சுன்னாமத்து இடதுசாரிகளும், சீன சார்வு இடது சாரிகளும்,

ஏ. ரி. நாகரட்ணமுமாகும்.

1970 க்குப் பின் தமிழ்ப் பேசுமக்களின் உரிமைக்காகவும், இலங்கையின் இன ஒற்றுமைக்காகவும் வர்க்க ஐக்கியத்துக்குமாகவும் அரசியல் வேலைகளை நடத்திய னுச இராசசுந்தரம், சுந்தரம், சந்ததியார், விசுவானந்த தேவன் போன்றவர்கள் ஆகும்.

தொடர்ந்தும் பல நிகழ்வுகளைப் பற்றி எழுதுவேன் இருந்தாலும் உங்களுக்குத் தொரிந்த நிகழ்வுகளை எழுதுங்கள். புஸ்பராஜா போன்ற பலர் பிழையான தகவல்களை வரலாறு என்று ஆவணப்படுத்தியுள்ளார்கள்.அவர் எழுதிய சகல எழுதிய விடையங்களும் தவறானவை என்று நிருபிக்க வேண்டயது ஜதார்த்தமான சமூக அரசியல் பேசுகின்ற அனைவரின் தலையான கடமையாகும்.

முதல் முதலில் சுந்தரலிங்கத் தான் ஈழ ஆயதப் போராட்டம் தெடங்கியவர்

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Comments are closed.