மாற்றுக் கருத்து என்பது சகல மேலாதிக்க அதிகார சக்திகளுக்கு எதிரான கருத்தையும், கடுமையான போக்கைக் கொண்டதாகவும் இருக்க வேண்டும். நடு நிலைமை என்பது சந்தர்ப்பவாதம். இது ஒரு வெறும் கம்பக்.
இலங்கையின் இன்றைய ஜதார்த்தமான அரசியல் சூழ் நிலையையும், ஈழப் பயங்கரவாத நடவடிக்கைகளையும் மனதில் வைத்துக் கொண்டு இக் கட்டுரையை வாசிக்கவும்.
இலங்கையில் இனப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு இன்று சர்வ கட்சிக் குழு திஸ்ஸ விதாரண தலைமையில் உருவாக்கப்பட்டது. இக் குழுவால் ஏதாவது ஒரு தீர்வை முன்வைத்தால் பாராளுமன்றத்தில் அதை மூன்றில் இரண்டுப் பெரும் பான்மை பலத்துடன் தான் நிறைவேற்றி, நடைமுறைப்படுத்த முடியும்.
1977 ம் ஆண்டு ஜே. ஆர் ரால் உருவாக்கப்பட்ட யாப்பின் பிரகாரம் அக் குழுவினால் முன்வைக்கப்படும் தீர்வைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடியுமா?
இன்று ரணில் (யு. என். பி.) இனப் பிரச்சனையைத்குழப்பமான தீவுத்திட்டத்தின் மூலம் தீர்த்து வைக்கப்பட்டால் தனது ஜனாதிபதியாக வரும் கனவும், அரசியல் வாழ்வும் அஸ்தமனமாகிவிடாது பாதுகாப்பததற்கும் மான எண்ணப் பாட்டில் உள்ள அவர், எந்த ஒரு தீர்வையும் முன் வைக்க மாட்டார்கள், தீர்வுத் திட்டத்தை யார் உருவாக்கினாலும் சம்மதிக்க மாட்டார்கள். இத் தீர்வுத் திட்டத்தை மையமாக வைத்து ஒரு பெரிய இனக் கலவரத்தைத் தூண்டுவதற்குச் செயல்ப்படுவார்.
இன்று முடங்கிக் கொண்டு போகும் ஈழப் பயங்கரவாதத்தைத் தலைதூக்கி விடுவதற்கான செயற்பாட்டை நடைமுறைப் படுத்துவார்.
( அன்று பிரபாகரனுடன் செய்து கொண்ட அர்த்தம் அற்ற சமாதானம் ஒப்பந்தம். அதன் பின் நடைபெற்ற நிகழ்வுகளை ஒரு தரம் மீளாய் செய்தால் இந் உண்மை புரியும்)
மீண்டும் ஒரு பெரிய இனக் கலவரத்தை உருவாக்க யு. என். பி. யின் செயற் பாட்டுக்கு இதற்கு ஈழப் பயங்கரவாதிகள் உறுதுணையாக நின்று செயற்படுபவர்கள். இதன் மூலம் மீண்டும் பயங்கரவாதத்தை மேலும் பலப் படுத்தித் தங்களை வளர்த்துக் கொள்வார்கள். இவை நடை பெற்றால் மேலும் 50 வருட காலம் வரை தமிழ்ப் பேசும் மக்களும், இலங்கை மக்களும் இந்த ஈழப் பயங்கரவாதத்துக்குள் புதைந்து அடிமையாக வாழ வேண்டி வரும். இது ஜதார்த்தமான உண்மையாகும்.
(யாழ் ஈழப் பயங்கரவாதத்தின் மீது ஏர்ப்பட் சலிப்பை போக்குவதற்கு கிழக்கில் யாழ் ஈழப் பயங்கரவாத்துக்கு சமனாக ஒரு பயங்கரவாத்தை கிழக்கில் தோற்றிவிக்க கருணாவை பிரித்த நிகழ்வும், அவ் விடையம் ரனிலின் கையை விட்டு மீறியதுவும், ஈழப் பயங்கரவாதம் அழிவிப் பாதைக்கும் போனது தான் இன்று யு. என். பி. யின் அரசியல் குழப்பதற்கு மூலகாரணம்)
சிங்கள பௌத்த இனவாதிகளும், யு. என். பி தான் 1883 ம் ஆண்டில் இருந்து இன்று வரை இனக் கலவரங்களை உருவாக்கியவர்கள். இவர்கள் ஒரு போதிலும் எந்த ஒரு தீர்வுத் திட்டத்தையும் ஆதரிக்க மாட்டார்கள். தீர்வையும் முன் வைக்க மாட்டார்கள். பதவிக்காகப் பல கில்லாடி வேலைகளைப் புரிவார்கள். இவர்களை ஆதரித்து 1977 ம் ஆண்டு வரை யாழ் மேலாதிக்க மேட்டுக் குடித் தமிழ்த் தலைமையையும், அதன் பின்
1983 ம் ஆண்டுக்குப் ஈழப் பயங்கரவாதிகளும் பக்கபலமாக இருந்து செயற் பட்டார்கள். இன்றும் செயல்ப் படுகின்றார்கள்.
இன்று வெளிநாடுகளில் சிங்களத் தமிழ் இனவாதிகள் ஒன்று கூடிச் சமாதானத்தைப் பற்றியும், மனித உரிமைகளைப் பற்றியும், தீர்வுத் திட்டங்களைப் பற்றியும் கதைத்து அறிக்கைகளை விடுகின்றார்கள்.
யு. என். பி யினதும், யாழ்ப்பாணத் தமிழ் மேலாதிக்க மேட்டுக் குடித் தலைமைகளின் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் இந்த உண்மை விளங்கும்.
தமிழ்ப் பேசும் மக்களைப் பலவீனப் படுத்தியவர்கள் இவர்கள் தான்.
யாழ் உயர் மேலாதிக்க மேட்டுக் குடித் தமிழர்கள் யு. என். பி யின் மறு பிரதி (ஊழுPலு) தான்.
இதனால் மலையகத் தமிழ் தேசியம், யாழ் ஈழத் தமிழ்த் தேசியம், கிழக்குத் தமிழ்த் தேசியம், முஸ்லீம் தேசியம் போன்ற பல தேசியங்கள் ஒரே மொழி பேசுகின்ற மக்கள் மத்தியில் உருவாக்கியது.
பிரித்தானியர்கள் இலங்கை மக்களை இன ரீதியாகவும், சாதி ரீதியாகவும், பிரதேச ரீதியாகவும் பிரித்தாண்ட வளி முறை போன்றது தான் இத் தேசிய பிரிவினையாகும.
அக் குழுவில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகள் தான் அங்கம் வகிக்க முடியும். இவ் இரு பயங்கரவாதத்தாலும் பாதிக்கப்பட்ட மக்களின் அபிலாசைகளையோ, அபிப்பிராயங்களையோ மதிக்கப்பட போவது வில்லை.
முதலாளித்துவ ஜனநாயகம் பாராளுமன்றப் பிரதி நிதிகளை அம் மக்களின் பிரதிநிதிகள் எனக் கருதுகின்றது. உதாரணமாக இன்றைய தமிழர் கூட்டமைப்பில் உள்ள பிரதிநிதிகளைத் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று கணிக்க முடியுமா? புலிகள் அவர்களை தமிழர்களின் பிரதிநிதிகள் என்று கூற விடுவார்களா? கொழும்பு முதாலாளித்துவ முஸ்லீம் தலைமையை முழு முஸ்லீம் மக்களின் பிரதிநிதி என்று கருத முடியுமா? இதைக் கிழக்கு முஸ்லீம்கள் ஏற்றுக் கொள்வார்களா? இது போன்று தான் மலையகத் தமிழ் மக்கள் மத்தியிலும்.
சிங்கள தமிழ், முஸ்லீம், மலையகம் போன்ற மாற்றுக் கருத்து வாதிகள் என்று கருதுபவர்களும், ஜதார்த்தமான மாற்றுக் கருத்து வாதிகளும், மதத் தலைமைகளும்,, சமூக சேவை அமைப்புக்களும், என். ஜி. ஓ வாதிகளும் இக் குழுவுக்குத் தீர்வுத் திட்டத்துக்கான ஆலோசனையை வளங்க முடியும். அதுவும் எழுத்து மூலமாகச் சமர்ப்பிக்க வேண்டும்.
இனப் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட தமிழ் முஸ்லீம் மக்களின் அபிலாசைகள் அபிப்பிராயங்கள் முதன்மைப் படுத்தபடவில்லை, முன்னுரிமை வளங்கப்படவில்லை.
கட்சித் தலைமைகளும், தமிழ்- முஸ்லீம், மாற்றுக் கருத்து வாதத் தலைமைகளும் தங்களுடைய பெயர் புகழுக்காக தங்களுடைய சுய அபிலாசைகளையும் அபிப்பிராயங்களையும் மக்களின் பெயரால் முன் வைப்பார்கள்.
இக்குழு ஜதார்த்தமாக ஒரு தீர்வுத்திட்டத்தை முன்வைக்க முடியாது என்பதாகும், இந்த பிரதிநிதிப்படுத்தும் கட்சித் தலைமைகள் மத்தியில் இனப் பிரச்சனைத் தீர்ப்பதற்கான ஒரு பொது உடன்பாடு இல்லை. நிறைவேற்ற முடியாத பல தரப்பட்ட முரண்பாடான தீர்வுத தி;ட்டங்களை முன் வைத்துள்ளார்கள்.
இனப் பிரச்சனை விடையமாக யு. என். பி ஒருவிதமான தீர்வுத் திட்டத்தை முன் வைத்துள்ளது,
சிறி. லங்கா சுதந்திரக் கட்சி ஒரு விதமான தீர்வுத் திட்டத்தை முன் வைத்துள்ளது,
ஜே. வி. பி. ஒரு விதமான தீர்வுத் திட்டத்தை முன் வைத்துள்ளது,
சிங்கள உறுமை ஒரு தீர்வுத் திட்டத்தை முன் வைத்துள்ளது.
தமிழர் கூட்டணி ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைத்துள்ளது.
முஸ்லீம் தலைமை ஒரு தீர்வுத் திட்டத்தை முன் வைத்தது.
மலையகத் தலைமை ஒரு தீர்வுத்திட்டத்தை முன்வைத்தது.
மாற்றுக் கருத்துடையவர்கள் (தமிழ், முஸ்லீம், சிங்கள., வெளிநாடுகளில் உள்ள மாற்றுக் கருத்துவாதிகளும்) பல விதமான தீர்வுத் திட்டத்தை முன் வைத்தார்கள்.
இத்; தீர்வுத் திட்டங்களில் ஒரு பொது உடன்பாடு உண்டா? அல்லது அவர்கள் மத்தியில் ஒத்த கருத்துக் கொண்ட இணக்கப்பாடு உண்டா? என்று பார்த்தால் எதுவும் இல்லை என்ற முடிவுக்கு வர முடியும். இவர்கள் மத்தியில் இனப் பிரச்சனைக்குப் பொதுவான தீர்வுத் திட்டமும், ஒற்றுமையும் இல்லாத நிலையில் தீர்வு கிடைக்கும் என்று கூறுவது பகல்க் கனவு காண்கின்றார்கள் என்பதே அர்த்தம் ஆகும். அர்த்தம அற்ற அபத்தமானநிறைவேற்ற முடியாத தீர்வுத்திட்டத்தைக் கதைத்துத் தாங்கள் குழப்பியதுவும் அல்லாமல், மக்கள் மத்தியில் குழப்ப நிலையை உருவாக்குவதற்கு இந்தத் தமிழ் மாற்றுக் கருத்துவாதிகள் முயல்கின்றார்கள்.
இவர்கள் அனைவரும் யாழ் உயர் மேலாதிக்க மேட்டுக் குடிச் சிந்தனையை உள் வாங்கியவர்கள் ஆகும். (யாழ் மையவாதத்தை).
தமிழ் பேசும் மக்களின் இனப் பிரச்சனையைத் தீர்த்து வைப்பதற்காக உருவாக்கப்ட்ட அனைத்துத் தீர்வுத்திட்டங்களையும் குழப்பியவர்கள்,
ஜே. ஆர். ரணில் யாழ் மேலாதிக்கத் தலைமை, பின்னர் ஈழப் பயங்கரவாதிகள் ஆகும். இன்று தமிழ் மாற்றுக் கருத்துவாதிகள் குழப்பங்களை விழைவிக்க அறிக்கைகள் விடுகின்றார்கள்.
டக்லஸ வைத்த தீர்வுத்திட்டம் ஓரளவுக்கு செயற்படுத்தக் கூடிய ஒன்றாகும். பாராளுமன்றத்தில் சாதாரண பெரும் பான்மையுடன் நிறை வேற்றக் கூடியது.
பிரித்தானியர் காலத்தில் கிராமத்தில் இருந்து மாகாணம் வரை ஆளும் நிர்வாகத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொண்டு, மனித முரண்பாடுகளையும்,சாதியத்தையும், பெண் அடிமைத்தனத்தையும், பிரதேச வாதத்தையும் சிறப்பாக வளர்த்து எடுத்து யாழ் உயர் மேலாதிக்க மேட்டுக் குடித் தலைமை அதிகார சக்தியாக வளரவில்லை? யாழ் மையவாதச் சிந்தனையை வளர்த்துப் பயங்கரவாதத்தைத் தோற்று விக்கவில்லையா?
இதன் வளர்ச்சி யாழ்ப்பாணத்தில் இருந்து மார்க்சிய இடது சாரிகளை இயங்க விடாமல் தடுக்க வில்லையா?
உயர்ந்த சிந்தனை (பொதுவுடமை சிந்தனை) கொண்ட மாற்றுக் கருத்துவாதிகளான நீங்கள் இந்த ஆளுமையை நிர்வாகத்தைக் கையில் எடுத்து(மாகாண அலகு); அவ் வடிவத்தின் மூலம் செயற்பட்டால் ஈழப் பயங்கரவாதத்தை ஒரளவுக்கு இயங்க விடாமல் தடுக்க முடியும், மக்களைக் காப்பாற்றி அம் மக்கள் மூலமாகப் பயங்கரவாதத்தை ஓரம் கட்ட முடியும். இதனால் மக்கள் அரசியல் மயப்படுத்தப்பட்டு விட்டார்கள் என்ற அர்த்தம் அல்ல. உதாரணமாக லெனினின் புரட்சி அமைப்புடன் மக்கள் எப்படி இணைந்தார்கள் என்பதைப் பார்த்தால் இந்த உண்மை புரியும். இலங்கைத் தொழிற் சங்க வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் (1890 ஆண்டில் இருந்து 1930 ஆண்டுவரை) இந்த உண்மை உங்களுக்குப் புரியும்.
மத்தியில்க் கூட்டாட்சி, மாகாணங்களில் சுய ஆட்சி என்ற அடிப்படையில் டக்லஸ் முன் வைத்த மூன்று அம்சத் திட்டத்தை இறைய அரசியல்ச் சூழ் நிலையை வைத்துப் பார்ப்போம்.
1. முதல் மாகாண நிர்வாக அதிகார அலகுகளுக்குள் மாற்றுக் கருத்து வாதிகளான நீங்கள்; நுழைந்து, எமது மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும். இதன் மூலம் ஓரளவுக்கு ஈழப்பயங்கரவாதத்தில் இருந்து மக்களைக் காப்பாற்ற முடியும். இதுதான் தமிழ், முஸ்லீம் தலைமைகளுடையதுவும், மாற்றுக் கருத்து வாதிகளின் இன்றைய தலையான கடமையாகும். இவர்கள் உள்ளார்ந்தமாக மக்களுடன் இணைந்து சேவையைச் செய்ய வேண்டும். இதற்கு ஈ. பி. டி. பி முன்னுதாரணமாகும். இதை விட்டுவிட்டு வெளி நாடுகளில் இருந்து கொண்டு அறிக்கைகள் விடுவது நிலாவைக் காட்டிக் குழைந்தைகளுக்கு உணவூட்டுவது போல் இருக்கும். பின்
2. மாகாணங்களுக்குக் கூடின அதிகாரங்களைப் பெறுவது. பாராளுமன்றத்தில் சாதாரண பெரும் பான்மை வாக்குகள் மூலம் நிறைவு செய்ய முடியும்.
நீங்கள் மக்கள் மத்தியில் சேவை புரிந்தால், மக்கள் உங்களை நம்புவார்கள், இதன் ஊடாக உங்கள் மத்தியில் இருந்து கூடுதலான பிரதிநிதிகளை மக்கள் பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கும் சூழ் நிலை ஏற்படும். இது உங்களுடைய ஆளுமையைப் பலமாக அமைத்து விடும்.
ஈ பி. டி. பி. ஒரு ஆசனத்தை வைத்துக் கொண்டு பல நல்ல விடையங்களைச் சாதித்ததை மறக்கவும் முடியாது, மறுதழிக்கவும் முடியாது.
இன்று வரை இலங்கையின் வரலாற்றின் படி ஒரு சிறு கட்சியை நம்பித் தான் இரு பெரும் சிங்களக் கட்சிகள் ஆட்;சி அமைப்பார்கள்.
யாழ்த் தமிழ்த் தலைமைகளும், முஸ்லீம், மலையகத் தலைமைகளும் விட்ட பாரிய பிழையால் இன்று ஒரு சிங்கள்க் கட்சிக்கு அந்தப் பலம் சென்று அடைந்தது.
இந்த இருபெரும் கட்சிகள் தங்கள் ஆளும் அதிகாரத்தை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். யு. என். பி யாருடனும் கூட்டு வைத்தாலும் இடது சாரித் தன்மை கொண்டவர்களுடன் கூட்டு வைக்க மாட்டார்கள் அதேசமயம் இடது சாரிகளின் வளர்ச்சியைத் தடுப்பார்கள். இருந்தாலும் இவ் இடது சாரிகள் முற்போக்குத் தேசிய முதலாளித்துவ வாதிகளுடன் இணைந்து கொண்டு தங்களை வளர்க்கின்றார்கள். இதற்கு ஜே. வி. பி நல்ல உதாரணமாகும்.
இலங்கை தொழிலாளர் வர்க்கச் சிந்தனையுடன் வளர்ந்த நாடு. எனவே இச் சிந்தனைகள் சில காலம் முதலாளித்துவ அடாவடித் தனத்தால் அமுங்கிக் கிடந்தது. தேசிய முதலாளித்துவம் வத்தால் மீண்டும் இடது சாரிப் போக்கு வளர்ச்சி அடையத் தொடங்கியது.
1ம் 2. ம் நிலைப்; படி மக்களுக்குச் சேவை செய்தால் நீங்கள் கூடுதலான பிரதி நிதிகள் பாரளுமன்றத்துக்குப் போக முடியும். இந்தப் பலத்தின் மூலம் நீங்கள்; தமிழ்ப் பேசும் மக்களுக்குச் சரியான தீர்வை பெற்றுக் கொடுக்க முடியும்.
அதற்கு முன்னம் உங்களுடைய கடந்தகால அரசியல் நிகழ்ச்சிகளையும், உங்கள் ஈழ விடுதலை அமைப்புக்களில் நடந்து கொண்ட சம்பவங்களையும், ( இது பழைய தலைமைவிட்ட பிழைகள் என்று பொறுப்பற்ற விதமாக நடக்கக் கூடாது. மக்களின் நம்பிக்கை தான் மிக முக்கியம்) இந்தியாப் படை இருந்த காலத்தில் நீங்கள் விட்ட பிழைகளையும் பகிரங்கமாக சுய விமர்சனம் செய்து தமிழ்ப் பேசும் மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். அப் போது தான் மக்கள் உங்களை நம்புவார்கள்.
சிங்களப் பகுதியில் ஜே. வி. பி அங்கத்தவர்களும் ஆரம்பத்தில இருந்து விட்ட தவறுகளைப் பகிரங்கமாக சுய விமர்சனம் செய்து மக்கள் முன் மன்னிப்புக் கேட்ட படியால்த் தான் இன்று ஜே. வி. பி. சிங்களப் பகுதியில் வளர்ச்சி அடைந்து ஆட்சி அமைக்கும் பலத்தைப் பெற்றது.
முக்கியக் குறிப்பு:- மலையகத் தமிழ் மக்களிடமும், முஸ்லீம் மக்களிடத்திலும் கிழக்குத் தமிழ் மக்களிடத்திலும் உங்கள் சேவை மூலம் நம்பிக்கையும், நல்மதிப்பையும் பெற்று அவர்கள் மத்தியில் இருக்கும் அவ நம்பிக்கையைப் போக்குவது உங்கள் கடமை. இதை1977 ம் ஆண்டுக்குப் பின் வவுனியாவை தலைமையகமாகக் கொண்டு இயங்கிய காந்தீயம் என்ற அமைப்பு ஓரளவுக்கு மலையக மக்கள் மத்தியில் இருந்த அவநம்பிக்கையைப் போக்கியது.
அவர்கள் பிரிந்து போவது, விடுவது அவர்களுடைய ஜனநாயக உரிமையாகும்.
ஜதார்த்தமான சிங்கள இடது சாரிகளிடம் நல் உறவு பேணப்பட வேண்டும். உங்களுடைய நிர்வாகத் தலைமையகம் சாதாரண உழைக்ககும் மக்கள் வாழும் பிரதேசங்களில் அமைத்து அவர்களின் வாழ்வு நிலையை உயர்த்தப் பாடுபட வேண்டும்.
சதாரண உழைக்கும் மக்கள் நிலத்தின் மீதான போராட்டமும், அப் போராட்டத்தை நடத்தும் அமைப்பின் தலைமை அம் மக்கள் மத்தியில் இருக்க வேண்டும் என்றும், ஜதார்த்தமான சிங்கள இடது சாரிகளின் எழுச்சிப் போராட்டமும் தான் தமிழ்ப் பேசும் மகளுக்கு விடுதலையை, சுதந்திரத்தை, ஜனநாயகத்தைப் பெற்றுக் கொடுக்கும் என்று சந்ததியார் அடிக் அடி கூறுவார். இது சீனப் புரட்சியை அடிப்படையாக வைத்துக் கூறப்பட்டது.
இவைகளுடன் யாழ்ப்பாணத்தில் சாதி எழுச்சிப் போராட்டமும், பெண் விடுதலைப் போராட்டமும் பாட்டாளி வர்க்க ஐக்கியமும் ஒன்று இணைந்து போராட்டங்கள் இடம் பெற்றால் தமிழ் பேசும் மக்களும், முழு இலங்கை மக்களும் சுதந்திரமான நாட்டில் வாழ முடியும் என்று சந்ததியார்ரும், சுந்தரமும்,அடிக்கடி கூறுவார்கள்.
சிங்கள பௌத்தப் பேரினவாதிகள் சாதாரண சிங்கள மக்களைக் குழப்பாமல் இருப்பதற்கும் மாகாண நிர்வாக அலகு முறைதான் சிறந்தது. தமிழ்ப் பேசும் மக்களை ஈழப் பயங்கரவாதத்திடம் இருந்து காப்பாற்றுவதற்கு மாற்றுக் கருத்து வாதிகளாகிய நீங்கள் மாகாண நிர்வாக அலகை நிர்வகிக்க வேண்டும். உங்கள் மத்தியில் குடி கொண்டு இருக்கும் ஈகோக்களை அழித்து ஐக்கியப்பட்டு மாகாண நிர்வாக அதிகாரத்தை தமிழர்களான நீங்கள் கையாழுவது சாலச் சிறந்தது ஆகும்.
இன்று ஈழ விடுதலை அமைப்புக்களில் இருந்த பல மார்க்சிய வாதிகள் மார்க்சின் பரம்பரை அணுவில் இருந்து பிறந்ததாகக் கருதுகின்றார்கள்.
ஈழப் போராட்டத்துடன் இணைந்த சகல மார்க்சிய மேதைகள் தாங்கள் வாசித்த மார்க்சியத்தை பிழையான கண்ணோட்த்தில்ப் பார்த்தார்கள். என்பதற்காக ஒரு உதாரணம் தருகின்றேன்:- லெனின் லும்பன் யார் என்று கொடுத்த விளக்கத்தைப் பிழையாகக் கருதி, சமூக விரோதிகளை லும்பன் என்று கருதிச் செயல்ப்பட்டது தான் ஈழப் போராட்டம் இந்த நிலைக்கு வந்தது.
மக்களுடன் இணைந்து மக்களின் நலன்களைக் கவனிப்பதன் மூலம் ஈழப் பயங்கரவாதம் ஓரம் கட்ட முடியும்.
ஆனந்தசங்கரி அண்ணை கதிர்காமர் விட்ட பணியைத் தொடர்ந்து செய்தது மட்டும் அல்லாது, தமிழ்க் குடும்ப உறவு முறையை வைத்து பிரபாகரனை நல்வளிப்படுத்த அவர் எழுதிய கடிதங்கள் அவரை உன்னத நிலைக்குக்; கொண்டு சென்றது.
தமிழரசுக் கட்சித் தலைமை 1966 ம் ஆண்டு விட்ட பிழைதான் தமிழ்ப் பேசும் மக்களின் அழிவுக்கு மூலகாரணம்.
1966ம் ஆண்டுக்ப் பின் இலங்கையில் தமிழ்ப் பேசும் மக்கள் உரிமைகளையும், சுதந்திரத்தையும் ஜனநாயக ரீதியாகவும் வாழ்ந்து வந்த மக்களைக் குழப்பிப் பயங்கரவாதத்தை வளர்த்தவர்கள் இந்த யாழ் மேலாதிக்க மேட்டுக் குடிச் சிந்தனை கொண்ட யாழ்த் தலைமையும், சிங்கள இனவாத மேலாதிக்கத் தலைமையும் ஆகும்.
1. 1929 ம் ஆண்டுக்குப் பின் இலங்கை மக்கள் (குறிப்பாக தமிழ் மக்கள்) சமூக மேன்பாட்டுடனும், மனித சமத்துவத்துடனும், சம உரிமையுடனும் வாழ வேண்டும் என்ற முழு முச்சுடன் உழைத்த முற்போக்குத் தன்மை கொண்ட யாழ் இளைஞர்கள் யாழ் மாணவர் காங்கிரஸ் என்ற அமைப்பை உருவாக்கினார்கள்.
2. இவ் அமைப்பு இலங்கையில் உள்ள சகல முற்போக்கு வாதிகளையும், மார்க்சிய இடதுசாரிகளையும் ஒன்று இணைத்தது. இவ் அமைப்பு இளைஞர்கள் யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் மத்தியில் இடம் பெற்ற சகல அடக்கு முறைகளுக்கு (யாழ் உயர் மேலாதிக்க மேட்டுக் குடித் தலைமைக்கும் ஆளும் பிரித்தானிய முதலாளித்துவ மேலாதிக்கத்துக்கும்) எதிராகப் பல போராட்டங்களை
நாடு தழுவிய விதத்தில் நடத்தி வெற்றி கண்டார்கள்.
இதனால்த் தங்களை யாழ் உயர் மேட்டுக்குடி என்று
அடையாளப்படுத்த
முடியாமல் போய்விடும் என்ற பயத்தால் இடதுசாரிகளை
1930ம் ஆண்டுக்குப் பின் குறைந்த சாதியின் பெயரைச் சூட்டி (சாதி
குறைந்த மக்களின் கட்சி என்று) இவ் இடது சாரிகளை,
இந்த யாழ் உயர் மேலாதிக்க மேட்டுக் குடித் தலைமை முழு
மூச்சுடன் செயற்பட்டு யாழ்ப்பாணத்தில் இயங்க விடாது தடுத்தார்கள்.
இதற்கு மேல் மேல் உயர் மேட்டுக் குடிச் சமூகமாக மாறியவர்களின்
(யாழ்ப்பாணத்தில் இது விடயமாக ஒரு பழ மொழி உண்டு) ஆதரவும்,
ஆறுமுகநாவலரின் இந்து மதப் போதனைக்கும் பிரித்தானியர்களின்
முழு அதிகார ஆதரவும் இருந்தது.
1977 ம் ஆண்டுக்குப் பின் ஈழ விடுதலை அமைப்புக்களுக்குள்
உருவான மார்க்கிய இளைஞர்களை அதே பாணியைப் பயன்படுத்தி
அழித்தார்கள். அமைப்புக்களை இயங்கவிடாது தடை செய்வித்தார்கள்.
இதே யாழ் உயர் மேட்டுக்குடியினரால்; சாதி குறைந்த சமூகம் என்று
அடையாளப் படுத்திய சமூகத்தில் உள்ள ஒரு தனி நபர் (அவரைப்
பயங்கரகவாத் தலைவனாக்கி) மூலம் வைத்துக் கச்சிதமாக செய்து
தங்கள் யாழ் மையவாதச் சிந்தனையை வலுப்படுத்தினார்கள். இதற்கு
சிங்கள பௌத்த பேரினவாதிகளான யு. என். பி. ஆளுமை பக்கபலமாக விளங்கியது. பிரித்தானியர் காலத்தில் உயர் சமூகங்களாக மாறிய தமிழர்களை வைத்து சாதி முரண்பாடுகளை மனித ஏற்றத் தாழ்வுகளையும், உருவாக்கி, பிரதேச வாதத்தின் மூலம் மனிதர்களைப் பிரித்துத் தமிழ்ப்
பேசும்; மக்களை அடிமையாக்கினார்கள்.
பிரதேச வாதத்தை வளர்ப்பதற்கு வன்னி மக்களைக் குரங்கு என்றும்,
மன்னார் மக்களை கோவேறு கழுதை என்றும், கிழக்கு மக்களை
எருமை மாடு என்றும்,, இந்திய மக்களை வடக்கத்தியான் என்றும்
கூறுவார்கள்
தங்களை அதி புத்திசாலிகளாகப் பிரித்தானியர்களுக்குக்காட்டி சாதாரண தமிழ்ப் பேசும் மக்களை நாகரிகம் தெரியாத காட்டு மிராண்டிகள் என்றும், சாதரண சிங்கள் மக்களை (இவர்கள் பிரித்தானியருக்கு எதிராக வன் முறையில் இறங்கியவர்கள்) கிரிமினல் குற்றவாளிகள் என்றும் சித்தரித்தார்கள். இச் சிங்கள மக்களைத் தான யாழ்ப்பாணத் தமிழ்த் தலைமைகளின் ஆதரவுடன் டி. எஸ் தமிழ்ப் பிரதேச எல்லைப் பகுதிகளில்;க் குடியேற்றினார். அன்று தமிழர் கூட்டணி உருவாகும் போது கிழககுத் தமிழ்த் தலைமையையும், முஸ்லீம் தலைமைகளையும் ஓரம் கட்டினார்கள். பல மார்க்சியத் தன்மை கொண்ட அமைப்புக்களை ஒரம் கட்டுவதற்கு ஈ. பி. ஆர். எல். எஃப், வின் தலைவர்களில் ஒருவரான மார்க்கிய மாமேதை என்று தன்னை அடையாளப் படுத்தியவரைத் தலைமைப் பதவியை முன்னிலைப்படுத்தி முக்கிய 5 அமைப்புக்களையும் ஒற்றுமையாக்கினார்கள். இதன் மூலம் யாழ் மையவாதத் தலைமை
யாழ் ஈழப பயங்கரவாதிகளை உருவாக்கினார்கள்.
இதன்பின் மற்றைய ஈழ அமைப்புக்களைத் தடைசெய்து, அதன்
போராளிகளையும், அத் தலைமைகளையும் அழித்தார்கள்.
ஈழப் பயங்கரவாதம் வளர்வதற்கு இக் கூட்டு முன் நின்று செயற்பட்ட .
ஈ. பி. ஆர். எல். எஃப் அமைப்பைப் பல்லர் அமைப்பு என்று
பகிரங்கமாகக் கூறி அதன் தலைவரையும் கொலை செய்தார்கள்.
இதனால் இந்திய அமைதிப் படை இருந்த காலத்தில் இவ் அமைப்பு
ஆட்சியை நடத்துவதற்கு இந்த யாழ் உயர் மேலாதிக்க மேட்டுக்
குடியினர்கள் தடையாக இருந்ததுவும் அல்லாமல் இவர்களின்
செயற்பாடுகளுக்கு எதிராகவும் (சாதி ரீதியாக) செயற்பட்டார்கள்.
மற்றைய மார்க்சிய அமைப்புக்களையும், மற்றைய சிறு
அமைப்புக்களையும் இணைத்தால் வர்க்க ரீதியான உணர்வைக்
கொண்ட தலைமை உருவாகிவிடும் என்ற பயத்தால் மார்க்சிய
வாதிகளை ஒரம் கட்டினார்கள்.
இது (1929 ம் ஆண்டில் இருந்து 1930 ஆண்டு வரை யாழ் மேலாதிக்க
மேட்டுக் குடித் தலைமைக்கும், பிரித்தானியர்களுக்கும் யாழ் மாணவர்
காங்கிரஸ் நடத்திய போராட்டங்களை மனதில் வைத்துக் கொண்டு தான் அவ் அமைப்புக்கள் ஒரம் கட்டப்பட்டது.) இவ் அமைப்புக்களுக்குள்
சந்ததியார், சுந்தரம், விசுவானந்தனுடைய செல்வாக்குகள் அதிகமாக
இருந்தது. இதனால் அமிர்தர் மார்க்சிய அமைப்பின் தலைவர்களின்
ஒருதரான தனி நபரை வைத்து அவ் அமைப்புக்களை ஒரம்
கட்டினார்கள். தன்வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டைச் சுடும் என்று பட்டனத்தார் கூறியதை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவருகின்றேன். தன்
விரலால் தன் கண்ணைக் குத்தவைத்த கதைதான் இது.
இந்தக் கூட்டு அமைப்பில் இருந்த தலைமைகள் (மார்க்சிய மேதைகள்)
விடுதலைப் புலிகளுடன் கூட்டாக இருந்த காலம்) சகல ஈழ விடுதலை
அமைப்புக்களைத் தடை செய்து அழித்த பின்பும் கூட புலி அமைப்பை
அக் கூட்டு அமைப்பில் இருந்து வெளியேற்ற வில்லை,
வெளியேற்றப்பட்டதாக அறிக்கைகளும் விட வில்லை.
(1984 ம் ஆண்டு புலிகள் இன வாதச் சிந்தனைதான் அனுராதபுரத்தில்
சாதாரண சிங்கள மக்களைச் சுட்டுக் கொன்றமை. இதன பின்பு
இனவாதப் புலிகளுக்கும் மார்க்சிய வாத அமைப்புக்கும் தான்
ஈழ விடுதலை கூட்டு முன்னணி உருவாகியது.)
ஆயுதம் ஏந்திய ஈழ விடுதலை அமைப்புக்கள் அழிக்கப்பட்டு விடும் பின் மார்க்சிய வாதிகளான நாங்கள் தான் தமிழப் பேசும் மக்களின் தலைவராக இருக்க முடியும் என்று மார்க்சிய மேதைகளின் கருத்தால் ஏர்ப்பட்ட இந்தக் கூட்டு முண்னணி. இந்தச் சிந்தனைதான் இக் கூட்டு முன்னணியில் இருந்து புலிகள் தான் மற்றைய அமைப்புக்களை 4 அமைப்புக்களையும் வெளியேற்றியதாக அறிக்கை விட்டு, அவர்களை அழித்து, இயங்குவதற்குத்;; தடை விதித்தார்கள்.
ஆனுராதபுரச சமபவம வெளி நாட்டு உளவு சக்திகளின் ஆதரவைப் பெற இந்த நிகழ்வு இடம் பெற்றது. அதுபோலத் தான் முஸ்லீம் மக்கள் மீதும் பயங்கரவாத நடவடிக்கைகள் இடம் பெற்றது.
இதன் மூலம் இந்த மார்க்சிய மேதைகளின் மார்க்சிய சிந்தனையின்
வெளிப்பாட்டை நீங்கள் அறிய முடியும்.
1989 ம் ஆண்டு அமிர்தரின் படு கொலைக்குப் பின் யாழ் உயர் மேலாதிக்க மேட்டுக்குடித் தலைமை பயங்கரவாதத்தின் கைக்குச் சென்றது.
இந்த மேலாதிக்க மேட்டுக் குடிச் சிந்தனையைப் (மையவாச் சிந்தனை)பயங்கரவாதச் சிந்தனையாக மாறியது.
இதனால்ப் பழைய தலைமைகளும் பல புத்திஜீவிகளும் அழிக்கப்
பட்டதூர்கள். தமிழ்ப் பேசும் மக்கள் சமாதானமாக செயல்ப் பாட்டுக்கு
(தீர்வுத்; திட்டத்துக்காக) உழைத்த கதிர்காமர், நீலன், கேதீஸ்
போன்றவாகளை அழிக்கப்பட்டார்கள்.
2. தமிழ் தலைமைகளுக்கு இடையில் ஏற்பட்ட தலைமைத்துவப் போட்டியால்
ஜி. ஜி. கொண்டு வந்த 50 க்கு 50 து என்ற கொள்கைக்கு எதிராக
செயல்ப்பட்டவர்கள் செல்வா-வன்னியசிஙகம் குழுவினர்கள்.
இவர்கள் தான் அன்றைய வவுனியா எம். பி. மரம் சுந்தரலிங்கம் கொண்டு
வந்த ஈழக் கோறிக்கைக்கு எதிராகச் செயற் பட்டார்கள்.
3. தாங்கள் யு. என். பி யின் செல்லப் பிள்ளைகளாக வருவதற்கு சத்தியாக்
கிரகப் போராட்டம், சிங்களச் சிறிப் போராட்டங்கள் மூலம், இனக்
கலவரத்தை உருவாக்கி அதன் மூலம் பண்டா- செல்வா ஒப்பந்தத்தைக்
கிழித்து எறிய வைத்தார்கள்.
இன்று வரை இலங்கையில் வாழும் சகல மக்களும் உரிமை அற்ற நிலையை உருவாக்கியவர்கள் இந்த யு. என். பி யினர்கள் தான். இதிலும் முக்கியமாகத் தமிழ்ப் பேசு மக்கள் பல இன்னல்களை அனுபவித்து ஈழப் பயங்கரவாதத்தின் கையில் சிக்குண்டு கிடப்பதற்கும் இந்த யு. என் பி. க் காரர்கள் தான்.
(தங்கள் வாகனங்களில் பெரும் தமிழ்க் குடி மக்களும், தமிழ்த் தலைவர்கள் ஆங்கிலச் சிறி எழுதிய வாகனங்களில் பவனி வந்தார்கள், சிங்களப் பெருங் குடிமக்களும், பௌத்த இனவாதத் தலைவர்களும் சிங்களச் சிறி தங்கள் வாகனங்களுக்குப் பயன் படுத்தினார்கள். பண்டார நாயக்க மாத்திரம் தமிழ் சிறியைப் பயன் படுத்தி பவனிவந்தார்)
யு. என் பி. மலையக மக்களின் உரிமைகளைப் பறித்து அடிமையாக்கித் தமிழ் மக்களைப் பல வீனப்படுத்தியவர்கள். இதற்கு யாழ் உயர் மேலாதிக்க மேட்டுக்குடித் தலைமை ஆதரவாக இருந்தார்கள்
இந்த். ஈழப் பயங்கரவாதிகள்முஸ்லீம் மக்கள் மீதும், கிழக்கு மக்கள மீதும்; கட்டவிட்டு விடப்பட்ட பயங்கரவாதச் செயற் பாடு அவர்களை ஒரு தேசிய இனமாக்கித் தனித்துத் தங்கள் உரிமைக்காகப் போராட முன் வைத்தது இது யாழ் உயர் மேலாதிக்க மேட்டுக்குடிச் சிந்தனை வாதிகள் ஆகும்.
பிழையோ சரியோ கிழக்கில் இருந்து ஏதாவது ஒரு வளி முறையில் யாழ் உயர் மேலாதிக்க மேட்டுக் குடியின் அதிகாரத்தை ஓரம் கட்டியவர் கருணா. ஆரம்பத்தில் இந்த மாற்றுக் கருத்துவாதிகளும், யு. என். பி யும் கருணாவை ஆதரித்தார்கள். இவர்களுடைய ஆதரவை விட இந்தியா போன்ற வெளி நாடுகளின் ஆதரவு கிடைத்தபடியால் இவர்களுடைய ஆதரவைக் கருணா விலக்கிக் கொண்டார்.
இதனால் யாழ் மேலாதிக்க மாற்றுக் கருத்து வாதிகளும், யாழ்ப்பாணத்துப் பரம்பரையில் வந்த கிழக்கில் குடியேறிய வாசிகளான மக்களும் கருணா மீது மனித உரிமை மீறல் என்று அடுக்கு அடுக்காக குற்றம் சாட்டி அறிக்கைகள் வெளியிட்டார்கள். கருணா யாழ்ப்பாணத்துக்கு எதிரான கடுமையானப் போக்கு பிள்ளையான் அவ் அமைப்பக்குத் தலைவனான். பின்னர் பிள்ளையானை ஆதரித்தார்கள். பிள்ளையானும் இவர்களை ஆதரிக்காதபடியால் பிள்ளையான் மீது மனித உரிமை மீறல் என்ற குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றார்கள். யாழ்ப்பாணத்துக்கு எதிராகச் செயல்ப்பட்டால் அது மனித உரிமை மீறல்தான்.
ஈ. பி. டி. பி அமைப்பின் மீதும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டை வைத்தார்கள். ஆனால் இவ் அமைப்பு தமிழ்ப் பேசும் மக்களுக்குச் சகல உதவிகளைச் செய்ததால் இவர்கள் முன்வைத்த குற்றச்சாட்டு பெரிதாக எடுபட வில்லை. (ஈ பி. டி. பி அரசுடன் அங்கம் வகிப்பதால் அரசின் மனித உரிமை மீறல்களும், யாழ்ப்பாணத்தில் பயங்கரவாதத்துக்கு எதிராக யுத்தம் செய்வதாலும்) இவர்கள் வைத்த குற்றச்சாட்டுக்கள் பெரிதாக உலக அரங்கில் எடுபடவில்லை.
இதனால் டக்லஸ் முன் வைத்த மூன்று அம்ச திட்டத்தை இவர்கள் விமர்சிக்கின்றார்கள். இருந்தாலும் யாழ் ஈழப் பயங்கரவாதிகள் நடத்தும் மனித உரிமைகளைப் பற்றி வாய் திறக்கவில்லை.
இனப் பிரச்சனைக்காக உருவாக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரதிநிதிக் குழுவில் இத் தமிழ் மாற்றுக் கருத்து வாதிகள் அங்கம் வகிக்க அனுமதிக்கப்படவில்லை. ஆனால் தங்கள் கருத்துக்களை எழுத்து மூலம் சமர்ப்பிக்க முடியும். அதைப் பரிசீலிப்பதுவும் விடுவதும் அக் குழுவில் உள்ள பிரதிநிகளைப் பொறுத்தது.
இது இந்த மாற்றுக் கருத்து வாதிகள் தங்களுக்குக் கிடைத்த கௌரவம் என்றும் ஜனநாயகம் என்றும் கருதுகின்றார்கள். இது ஜனநாயம் அல்ல இது ஒரு கண் துடைப்பாகும்.
(பிழை சரிகளுக்கு அப்பால் கிழக்குப் பிரிந்து கருணா அதிகாரத்துக்கு வந்த பின் இந்த யாழ்ப்பாணிகளுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் தான் கிழக்கில் மனித உரிமை மீறல் என்று இந்த மாற்றுக் கருத்து வாதிகளின் கண்ணுக்குத் தெரிய வந்தது. ( கருணா புலி அமைப்பில் இருந்த போதும், கருணா பிறிந்த போது கிழக்குத் தமிழ் இளைஞர்கள் புலிகளால் கொல்லப்படும் போதும் கூட இந்த மாற்றுக் கருத்து வாதிகளின் கண்களுக்கு மனித உரிமை மீறலாகத் தெரியவில்லை? சகலதையும் இழந்த நிலையில், வன்னியில் 7 லட்சம் யாழ்த் தமிழர்கள் சுதந்திரமாகவும், ஜனநாயகமாகவும் வாழ்கின்றார்கள் என்று இவர்கள் கருதுகின்றார்கள போலும்;)
இந்தியா போன்ற தீர்வு, அதிகாரப் பகிர்வு, வடக்கு கிழக்கு இணைந்த தீவு இப்படியான பல முரண்பாடான தீர்வுத்திட்டத்தை இந்தத் தமிழ் மாற்றுக் கருத்து வாதிகள் முன் வைக்கின்றார்கள்.
பீஸ் என்ற ஆங்கில வார்த்தைக்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு. ஒன்று பீஸ் (pநயஉந) சமாதானத்தைக் குறிக்கும், மற்றொன்று பீஸ் ( piஉந) என்பது துண்டு துண்டாக்கும் என்று பொருள்படும். இவர்கள் எந்தப் பீஸ்சை முன்வைக்கின்றார்கள் என்று புரியவில்லை.
சர்வ கட்சியில் உள்ள கட்சிகளைப் பார்க்கும் போது
1. யு. என். பி. இன்று வரை இனப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வையும் முன்
வைக்கவில்லை.
2. சிறி. ல. சு க்கட்சி கிராமிய ரீதியான தீர்வுத் திட்டத்தை
முன்வைத்துள்ளது. இது அதிகாரம் கீழ் இருந்து மேல் செல்ல வேண்டும்
என்ற கருத்துபட வைக்கப்பட்டது.
3. ஜே. வி. பி. சமத்துவம் என்ற தீர்வை அவர்களின் அரசியல் யாப்பில்
வைக்கப்பட்டுள்ளதாகவும் தாங்கள் அதிகாரத்துக்கு வந்தால் நடை
முறைப்படுத்துவதாகவும் கூறுகின்றது. இவர்கள் எப்போது ஆட்சிக்கு
வருவது இனப் பிரச்சனை எப்போது தீரும். இது கனவு உலகம்.
கிரிகெட்டில் முரளிதரனின செய்த சாதனையை வைத்துக் கொண்டு
உங்கள் தலைவர் பேசிய பேச்சை வைத்துக் கொண்டு இந்த இனப்
பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வை முன் வையுங்கள்.
5. சிங்கள உறுமை சிங்கள மக்களுக்குத் தீங்கு இல்லாது தீர்வு முன்
வைக்கப்பட வேண்டும் என்று கூறுகின்றது.
6. எந்த ஒரு சர்வதேசச் சமூகமும் சமாதானத்தை வலியுறுத்துகின்றார்களே
ஒழிய எந்த விதமான தீர்வுத் திட்டத்தையும் முன் வைக்க வில்லை.
வெளி நாடு வைக்கப் போகும் தீர்வுத் திட்டம் தங்கள் நாட்டின் அரசியல்ச்
சூழ் நிலையைப் பாதிக்காத விதத்தில்த்தான்; தீர்வுத் திட்டத்தை முன்
வைப்பார்கள்.
உதாரணம் இந்தியாவை எடுக்கலாம். தங்கள் நாட்டுக்கு ஈழம் சாதகமான
நிலைமை உருவாகும் வரை சரியான தீர்வை இந்தியா முன் வைக்காது.
இது ஜதார்த்தமான உண்மை. அவர்களின் பிராந்தியப் பாதுகாப்பு
முக்கியம் வாய்ந்தாகும்.
இலகுவாகக் கிடைக்கக் கூடிய தீர்வுத்திட்டம் கற்பனையில் உருவாகும்
தீர்வுத் திட்டத்தைக் குழப்புவது என்பது அபத்தமாகும்.
பிரித்தானியர் காலத்தில் இந்த மாகாண நிர்வாக அலகைப் பயன்படுத்தி யாழ் உயர் மேலாதிக்க மேட்டுக் குடிச் சிந்தனையை வலுவுள்ளதாக வளர்த்து சாதியத்தையும், இனவாதத்தையும், பிரதேச வாதத்தையும், பெண் அடிமைத் தனத்தையும் வளர்த்தார்கள். மாகாணங்களின் நிர்வாக அலகுகளை தம் வசம் எடுத்துக் கொண்டதால்த்தான் புலிகள் தங்களை தமிழ்ப் பேசும் மக்களின் ஏக பிரதிதிகளாக வளர்த்துக் கொண்டார்கள். அவர்களின் பயங்கரவாதச் செயற்பாட்டால்; அந்த நிர்வாக அலகைத் தக்க வைக்க முடியாம்ல்ப் போய்விட்டது.
கருணாவின் பிரிவால் புலிகள் தாங்கள் தான் தமிழ்ப பேசும் மக்களின் ஏக பிரதிநிதித்துவம் என்று எண்ணம் (தலைமை) பறிபோனது..
ஜே. வி. பி யால் கிழக்கு பிரிக்கப்பட்டதால் இத் தலைமை பறிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
வெளி நாட்டில்ப் புலிகளின் ஆதரவாளர்களின் நடவடிக்கை பயங்கர வாத இயக்கம் என்று உலக நாடுகள் தடை செய்தது.
இவைகளை மனதில் வைத்துக் கொண்டு மாற்றுக் கருத்து வாதிகளான
நீங்கள் ஏன் இதே அலகைப் பயன்படுத்தி முற்போக்குத் தன்மை கொண்ட மாற்றுக் கருத்துச் சிந்தனையை வளர்த்து, சகல மக்களையும் ஐக்கியப் படுத்தித் தமிழ்ப் பேசும் மக்களை இந்தப் பயங்கரவாதத்தில் இருந்து ஏன் காப்பாற்ற முடியாது? ஏன் விடுதலையைப் பெற்றுக் கொடுக்க முடியாது?
நிர்வாக அலகுகள்:-
கிராமச் சங்கம் தொடக்கம் மாநகர சபை வரை. கிராம சேவகர் தொடக்கம் ஜி. எ. வரை, பொலிஸ் தொடக்கம் நீதி மன்றம்வரை இவைகள் பழைய நிர்வாக அமைப்புக்கள். இதைத் தமிழ் பேசும் மக்களின் நலன் கருதிப் புதிதாக நிர்வாக அலகை மாற்றி அமைப்பை அமைக்க வேண்டும்.
என். ஜி ஓ அதிக்கத்தைக் குறைப்பதற்கு புதிய நிர்வாக அலகை உருவாக்க வேண்டும். இந் நிர்வாக அலகு கீழ் மட்ட மக்கள் தொடக்கம் மேல்த் தட்டு மக்கள வரை சமூகம் சார்ந்து சேவை புரிய வேண்டும். இது மக்களுக்கு நேரடியாக சேவை செய்வதனால் இது மிக முக்கியமான நிர்வாக அலகாக அமைக்க வேண்டும். (இதனால்த் தான் வெளிநாட்டு மேலாதிக்கச் சக்திகளின் ஊடுருவல்களைத் தடுக்க முடியும்;)
அதிகாரங்கள் இதுவரை காலமும் மேல் இருந்து தான் கீழ் சென்றது. உங்கள் காலத்தில் அதிகாரங்கள் யாவும் கீழ் இருந்து தான் மேல் செல்ல வேண்டும். இது சாதாரண மக்களுக்கு நன்மை அளிக்கும்.
முக்கிய குறிப்பு:- நான் பழைய விடயங்களை இறை மீட்டது உங்கள் கை விரலால் உங்கள் கண்ணைக் குத்தக் கூடாது என்பதற்காகவும், இது தமிழ்ப் பேசும் மக்களின் முதுகிலும் குத்தக் கூடாது என்பதற்காகவும்.
இதை வாசித்து விட்டு என்னை
ஈ. பி. டி. பி ஆள் என்றால் நான் ஆம் என்பேன்
ஜே. வி. பி ஆள் என்றாலும் நான் ஆம் என்பேன்
சங்கரி அண்ணனின் ஆள் என்றாலும் நான் ஆம் என்பேன்.
மகிந்தாவின் ஆள் என்றாலும் நான்; ஆம் என்பேன்.
யு. என். பி க்கும், தமிழ் மையவாதச் சிந்தனைக்கும், என். ஜி. ஓ. வாதிகளுக்கும், இனவாத அமைப்புகளுக்கும் அன்னியத் தலையீட்டுக்கும் நான் எதிரானவன். என்னை மார்க்சிய வாதி என்று கருதினால் அது உங்கள் பிழை என் பிழை அல்ல.