கருத்தும் விவாதங்களும்

ஆண் ஆதிக்கம் உருவாகிய காலம் தொடக்கம் மார்க்சியம் உருவாகும் காலம் வரை மதத் தத்துவங்களின் அடிப்படையாக வைத்து, மக்களை அடிமையாக்கி ஆட்சி அதிகாரத்தை நடைமுறைப்படுத்தினார்கள். மனிதர்களின் முற்ப் பிறவியின் பாவ புண்ணியங்களின் படியம், இப் பிறவியில் தாம் செய்யும் புண்ணியங்கள் தான் வாழ்வியலை சொர்க்கமாக்கும் என்ற மனோ பாவத்தை இந்த சகல மதத் தத்துவங்களும் போதித்தனர். மக்கள் இவைகளை ஏற்றுக் கொள்ளும் விதத்தில் அலங்கார வசனங்கள் மூலமும், அலங்காரக் கட்டிடங்கள் மூலமும் நடைமுறைப் படுத்தினார்கள்.

இத்; தத்துவத்தைத் தான் மார்க்ஸ் கருத்து முதல் வாதம் என்று கூறிப்பிடுகின்றார். இவகைளை பின்பற்றித்தான் இந்து மதக் கதைகளும், கோய்யில்களும் உருவாகியது.

இராமாயனத்துக்கு முன்னர் சைவ சமயம் என்ற ஒரு சமயம் இருந்ததாகவும், இயற்கையை வளிபடும் மக்களாகவும், கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இடைத் தரகர்கள் (பிராமணிகள், மூலஸ்தானங்கள்) இல்லாத முறையில்த்தான் தெய்வ வளிபாடு இடம் பெற்றதாகக் கூறப்படுகின்றது. இது பொதுவுடையான சமயமாக விளங்கியது. கந்த புராணாம் இச சமயத்தின் முக்கிய அம்சமாகும். இராமாயனப் போருக்குப் பின் இச் சமயம் அழிக்கப்பட்டு விட்டதாகக் கூறப்படுகின்றது. கந்தன் என்பது தமிழ் என்ற் மறு பெயர் ஆகும் இச் சயத்தைப் பின்பற்றிய மக்கள் தமிழர்கள் என்று கூறப்படுகின்றது. இச் சைவ சமயம் தனித்துவமான கடவுள்களை உருவாக்கினார்கள். (பெண் கடவுள்களை). இக் கடவுள்களை இந்து மதம் இறுக்கமான குடும்ப உறவு முறையை உருவாக்கி அதற்கு ஏற்ப கதைகளையும் உருவாக்கினார்கள். இதன் மூலம் பெண்கள் அடிடைப்படுத்தப்பட்டார்கள்.

ஆண் ஆதிக்கச் சொத்துடைமை சமூகம் உருவாகியது. இதன் பின் உருவான சகல மதங்களும் ஒரு மாயையான மயக்க நிலையை உருவாக்கி மனிதர்களைப் பிரித்து ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கி, சமூக – மனித மத்தியில் பகை முரண்பாடுகளைத் தோற்றுவித்து ஆட்சி அதிகாரத்தைச் செலுத்தினார்கள்.

இவ் அதிகாரத்தின் உச்ச நிலையால் சீர்திருத்த வாதத்தை உருவாக்கியது.

பழைமை வாதம் கொண்ட மதங்கள் மத்தியில் புதிய மதங்கள் உருவாகியது. கத்தேலிக்க மதத்தைச் சீர் திருத்தப் புரட்டாஸ்தாந்து மதம் உருவாக்கியது. இந்து மதத்தைச் சீர் திருத்தப் புத்த மதம் உருவாகியது. இதுபோல் இஸ்லாம் மதத்திலும் புதிய மதங்கள் உருவாகியது. இம் மதங்கள் யாவும் ஆட்சி அதிகாரத்துக்குப் பின்புலனாக விளங்கியது. இம் மதங்களின் செயற்பாடு மக்களையும் மதத்தையும் பிரிக்க முடியாத படி இசைவாக்கமாக மாறிவிட்டது.

சொர்க்கம் மனித வாழ்வியலுக்கு நல்ல இடமாக அமைந்தால் இந் மேலாதிக்க அதிகார வர்க்கம் சாதாரண மக்களுக்குச் சொர்க்கத்துக்குப் போகும் மார்க்கத்தைக் கூறுவார்களா? சிந்தித்துப் பாருங்கள்.

பூவுலகத்தில் கிடைக்கக் கூடிய சகல விதமான சுக போக வாழ்வைச் சாதாரண மக்களிடம் இருந்து தட்டிப் பறிக்கும் இந்த மேலாதிக்க அதிகார வர்க்கம் பூவுலகத்தில் கிடைக்க முடியாத சுகபோகங்கள், சொர்க்கத்தில் கிடைக்கும் என்று கருதி இருந்தால் அங்கு முதல் போகும் நபர்கள் இந்த மேலாதிக்க அதிகார வர்க்கமாகும். எனவே இது மேலாதிக்க அதிகாரச் சக்திகளின் தங்கள் அதிகாரத்தை வளர்ப்பதற்குக் கற்பனையில் உருவாக்கிய உலகம்.

இக் காலகட்டத்தில் கருத்து முதல் வாதத்துக்கு எதிராக மார்க்ஸ் பொருள் முதல் வாதம் என்ற மாற்றுக்கருத்துத் தத்துவத்தை உருவாக்கினார்.

இதன் பின் உழைக்கும் மக்களைக் கொண்ட பாட்டாளி வர்க்கம் என்றும், சுரண்டி வாழும் அதிகார வர்க்கத்தை முதலாளித்துவ வர்க்கம் என்றும், இவ் இரு வர்க்கத்துக்கு இடையே ஏற்பட்ட அதிகாரப் போட்டிகளால் உருவாகிய மாற்றுக் கருத்துக்கள், உறங்கிக்கிடக்கும் (இசைவாக்கம் அடைந்த மக்களை) மக்களைச் சிந்திக்கத் தூண்டுவதற்குக் கருத்து விவாதமாக அமைந்தது.

இதனால் உலகம் நாகரீக வளர்ச்சியால் மாற்றுக்கருத்துத் தளத்தில் கருத்து விவாதங்கள் இன்றியமையாததாக இருப்பதால் இக் கட்டுரையை உங்கள் பார்வைக்கு முன் வைக்கின்றேன்.

கருத்து முதல் வாதத்தக் கருத்துக்களுக்கு மாற்றாகப் பொருள் முதல் வாதக் கருத்தைப் பொருள்களை முதன்மைப் படித்தி, அதன் அடிப்படையை வைத்துத் தான் மார்க்சியத் தத்துவத்தை மார்க்ஸ் உருவாக்கினார்.

ஒரு மனித-சமூகச் சூழலில் இடம் பெறும் நிகழ்வுகளும், அப் பொருள்களும் தான் அம் மனிதனைச் சிந்திக்கத் தூண்டியது. உலக வளர்ச்சிப் போக்கில் மொழி சிந்தனையியை வெளிப் படுத்துவதற்காக உதவுகின்றது. இன்று சிந்தனையை வெளிப்படுத்த எழுத்து வடிவங்கள் அவசியமாக அமைகின்றது. இன்று கலை கலாச்சாரம், விம்பங்களுக்கு ஊடாகவும் சிந்தனையை மக்களுக்கு இலகுவாக வெளிப்படுத்துவதற்கு உதவுகின்றது. வெப் சயிற் அதி முக்கிய இடத்தை வகிக்கின்றது. உலகத்திலேயே நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் அறியக் கூடிய சாதனமாக அமைந்துள்ளது.

இதனால் இவைகள் தான் மனித சிந்தனையைத் தூண்டுகின்றது என்ற எண்ணப் பாட்டை உருவாக்கி விட்டது.

உலகம் இயங்கியல் வளர்ச்சிப் போக்கில் வளர்ந்து கொண்டு போகும் நிலையில் தமிழ் மாற்றுக் கருத்து வாதிகள் பழைய நிலையில் தேங்கிக் கிடக்கின்றார்கள் என்பதை இக் கருத்து விவாதம் படம் பிடித்துக் காட்டுகின்றது.

உதாரணத்துக்கு தளபதி கருத்துண்டில் எழுதிய சிந்தனையைக் கூறிப்பிடலாம்.

பொருள் முதல் வாதம் எனபது மனித வாழ்வியலுக்கு முக்கியமானது என்றும், அப் பொருள்கள் தான் மனிதனை அடிமையாக்க ஏதுவாக இருந்தது என்று அன்றைய உலக அரசியல்ச் சூழல் மார்க்சியம் சிந்திக்க வைத்தது. அன்று ஆயுதங்கள் தான் போராட்டத்தைத் (போர்கள்) தீர்மானிக்கும் சூழ் நிலை இருந்தது. இதனால்த் தான் ஆயுதப் புரட்சியை அவர் வலியுறுத்தினார். இது வெற்றி பெற்றுவதற்கு உழைக்கும் சாதாரண மக்கள் ஆயுதம் ஏந்த வேண்டும் என்று விளக்கமும் கொடுக்கப்பட்டது.

எமது வர்க்கத்தச் சார்ந்த மனிதர்கள், அதிகார வர்க்கத்தைப் பாதுகாப்பதற்கு ஆயுதம் ஏந்தி இருப்பதால் அவ் ஆயுதங்களை கீழே போடவைப்பதற்காகத்தான் புரட்சியாளர்கள் ஆயுதம் எந்துகின்றோம்- என்று வியாக்கியானம் கொடுக்கப்பட்டது. இது என்றைய சூழலிலும் பொருந்தும்.

கருத்து முதல் வாதம் மனித சிந்தனைகளை மளுங்கடித்து மனித ஜீவியத்தை வளப்படுத்த முடியும் என்று கூறுகின்றது. பாவ-புண்ணியங்கள், முற் பிறவிப் பலன்கள், மதத் தத்துவங்கள் போன்றவைகள் ஆகும்.

மதம் முதலாளித்துவ அடக்கு முறை அரசியல் போக்கையும், இரு வர்க்க வேறுபாடுகளைத் தாண்டி மனித இனம் பிரிக்கப்பட்டுப் பகை முரண்பாடுகளை வளர்த்துள்ளது.

அதிகாரப் போட்டி, ஆணவப் போட்டி போன்றவைகள் உருவாகி ஓரே மொழி, கலை கலாச்சார்ம் கொண்ட மக்களைப் பல கூறுகளாக பிரித்துச் சண்டையிட வைத்து விட்டார்கள்.

இன்றைய அரசியல் காலச் சூழலில் மக்களின் ஜதார்த்தமான சிந்தனை வளத்தை உருவாக்குவதற்குக் மாற்றுக் கருத்தியல் ரீதியான செயல்ப்பாடு மிக அவசியமாகின்றது. இதனால்ப் பொருள் முதல் வாதம் பின் தள்ளப்பட்டு விட்டது. மக்கள் மத்தியில் கருத்துச் சிந்தனை வளர்ச்சி அடையும் போது தான் பொருள் முதல்ச் சிந்தனை முன் நின்று செயல்ப்படும்.

பொருள் முதல்ச் சிந்தனை முதன்மைப்படுத்த வேண்டுமாயின் கருத்துச் சிந்தனை முன் வைக்க வேண்டும். பிழையோ, சரியோ சகல விதமான கருத்துக்களையும் முன் வைத்து விவாதிக்க வேண்டும். ஜதார்த்தமான மக்கள் நலன் கருதும் கருத்துக்கள் மேல் ஒங்கி வரும்.

இதை இயங்கியல்த் தத்துவம் கூறுகின்றது.

ஒரு பொருளை அதி வேகமாக அமுக்கும் போது அப் பொருள் பீறிட்டு வெளியில் வரும் என்பது விஞ்ஞானத்தின் கூற்று.

ஒரு பெருள் மீதான அமுக்கம் சரியான வளி விதி முறை கொண்டதாக இருக்க வேண்டும். பிழையான அமுக்கத்தால் அவ் விடம் சீர் அழிந்து விடும். உதாரணம் ஈழ விடுதலைப் போராட்டங்கள்.

மார்க்சியத்துக்கு முன்னர் மேலாதிக்க வாதிகளால் உருவாக்கப்பட்ட கருத்து முதல் வாதத்தால் (மத வாதத்தால்) துரோகிகள் உருவாக்கப்பட்டார்கள். இதனால் கொலைகளும் இடம் பெற்றன. இதற்குத் தரும யுத்தம்- அதர்ம யுத்தம் என்று பெயர் இட்டார்கள்.

அதர்ம யுத்தத்துக்குப் பாவ புண்ணியம் என்ற போர்வையில் இந்து மதம் கடவுளின் பெயரால் தர்ம யுத்தமாக்கினார்கள்.

உதாரணம் இராமாயனப் போர், மாகாபாரதப் போர்.

எதிர்க் கருத்துடையவர்கள் (மாற்றுக் கருத்து வாதிகள்) அன்று இருந்து இன்று வரை துரோகிகள் தான்.

துரோகி யார் என்று பார்க்க வேண்டும்.

1. பாண்டவர் காலத்தில் இந்து மதத்துக்கு எதிரான அதே மதம் சார்ந்த மக்கள் துரோகி என்று கூறப்பட்டார்கள்.

2. சங்கிலியன் காலத்தில் மதம மாறிய மன்னார் தமிழ் மக்கள் துரோகிகள் என்று அழைக்கப்பட்டார்கள்.

3. 1929 ம் ஆண்டு தேசிய வாதிகள், முற்போக்கு வாதிகள், மார்க்சிய வாதிகள் துரோகிகள் என்று கணிக்கப்ட்டார்கள்.

4. மலையகத் தமிழ் மக்கள் துரோகிகள் என்று விளிக்கப்ட்டார்கள்.

5. ஜி. ஜி. பலரைத் துரோகியாக்கினார். பின் இவரே துரோகியானர். அது போல் அமிர்தர் பலரைத் துரோகியாக்கினார் பின் அவரும் துரோகியானார்.

6. ஒரு சமூகத்தைத் துரோகி என்று கூறியவர்கள் இந்த யாழ் உயர் இந்து மேலாதிக்க வாதிகள் ஆகும். இவர்கள் பிரித்தானியர்களின் நன்மைக்காக தம் இன மக்களைச் சாதி ரீதியாகப் பிரித்துத் துரோகிகள் என்றும்,  தங்கள் மேலாதிக்கத்தை வளர்ப்பதற்குப் பிரதேச ரீதியாகவும், இன ரீதியாகவும் அம் மக்களை துரோகிகள் என்று கூறினார்கள். உதாரணம்:- முஸ்லீம் மகளும், கிழக்கு மக்களும் ஆகும்.

மார்க்சியம் இயங்கியல்த் தன்மை தேங்கிவிட்டதால் இத் தத்துவத்தை இயங்கியல் ரீதியாக வளர்ப்பதற்கும் நெகிழ்ச்சிப் போக்கை உருவாக்குவதற்கும் பல தத்துவங்கள் உருவாகியது. (பின் நவீனத்துவம் வரை) . இந்த தத்துவ மேதைகளுக்கு இடையில் ஏற்பட்ட பிணக்குகள் அவர்களை அழித்தது. இது முதாலாளித்துவத்துக்குச் சாதகமாக அமைந்தது. இது போல்த் தான் இன்று கரித்துண்டில் இடம் பெறும் கருத்து விவாதங்கள் அமைகின்றது.

தனிப் பட்ட விதத்தில்ப் பதிலுக்கு பதில் எழுதுவதை விட்டு விட்டு கருத்துடன் கருத்தை மோத விட்டால் ஆரோக்கியமாக அமையும். வீம்புக்கு எதையும் எழுதக் கூடாது. உலகம் இன்று மனித நாகரீக வளர்ச்சியடைந்த பின் கொலைகளை ஆதரித்து எழுதுவது ஒரு வீம்புச் செயலாகும். இது கருத்து விவாதம் அல்ல. தனிப்பட்ட தனி மனித கருத்துக்களை ஒதுக்கி விட்டால் நம் மத்தியில் ஆரோக்கியமான கருத்துக்கள் உருவாகும். நாம் ஒரு குடும்பம் இப்படியான விவாதங்களைக் கை விடுவது சாலச் சிறந்ததாகும்.

நம்மவர் மத்தியில்த் தான் நம்மவர்கள் எதிரியாகச் செயல்ப்படுகின்றார்கள். வெளியில் இருந்து யாரும் எதிரிகள் வருத் தேவையில்லை.

உதாரணம் தேடகம். எங்கள் மத்தியில் உருவான ஈழ விடுதலை அமைப்புக்களும்.

தனி மனித சம்பந்தப்பட்ட கருத்துக்களை விவாதிப்பது ஆரோக்கியமற்றது. உதாரணமாக சுந்தரத்தை துரோகி என்று கூறுவது தளபதியின் அவருடைய விருப்பு வெறுப்புக்கு ஒத்ததாகும். இவர் போன்று அனேம மானோர் இருக்கின்றார்கள். இதற்கு எதிராகப் பதில் எழுதுவது முட்டாள்த் தனம். இதற்காக என்னை கோளை என்றாலும் சரி, துரோகி என்றாலும் சரி நான் கவலைப்படப் போவதில்லை. ஒரு மனிதன் மற்றைய மனிதனின் உயிரைக் குடிப்பதை, மனிதம் உள்ள எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

ஓடையிலே என் சாமபல் ஓடும்போதும் என் தமிழே சலசலத்து ஒட வேண்டும் என்று உரைக்கும் இன்றைய ஈழத் தலைமை தளபதி ஆங்கிலத்தில் எழுதியமைக்கு மன்னிப்பார்களா அல்லது துரோகி என்று கூறுவார்களா என்பதைக் காலம் தான் பதில் கூறும்.

ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான பலவீனங்கள் உண்டு. நல்லது கெட்டதைத் தீர்மானிப்பது அவர்களுடைய சிந்தனையும், சூழலும் ஆகும்.

குறிப்பு:- நான் யாரையும் எதிரியாகப் பார்க்கவில்லை. எனது கருத்தில்ப் பிழை இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் இது என்னைத் திருத்துவதற்கு ஏதுவான விமர்சனமாக அமையும். நான் உங்கள் மத்தியில் இருக்கும் சாதாரண மனிதப் பிறவிதான். நாம் தனிப்பட்ட ரீதியில்ப் பிடுங்குப்படுவது நம்மை எதிர்ப்பவர்களுக்கு நன்மை அளிக்கும். இதனால் எமது நீண்ட பயணம் தடைப் பட்டு விடும்.

கரித்துண்டின் கருத்து விவாதம் ஜதார்தமாக முனனெடுக்க வேண்டும் என்ற என்பதற்காகவும், ஜனநாயக ரீதியான மாற்று கருத்தை கரித்துண்டு வாசகர்கள் உள் வாங்க வேண்டும் எனப்தற்கா எனது தத்துவ அறிவை வைத்துக் கொண்டு இக் கட்டுரைகளை எழுதியுள்ளேன். இதில் பிழையிருப்பின் ஆரோக்கியமான விமர்சனத்தை முன் வைத்து இக் கட்டுரையை அழகுபடுத்துங்கள்.

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Comments are closed.