ஓரு செயலுக்கு அல்லது ஒரு விடையத்துக்குப் பல பரிமாணங்களும், பல வாசிப்பும், பல மொழி பெயர்ப்பும் உண்டு.
கிட்டுதலாகப் (ரிலேற்றிவாக-சுநடயவiஎவைல) பார்த்து விடையங்களை எடுத்துக் கொண்டு தங்கள் பார்வைக்கு ஊடாகப் பரிணாமப்படுத்தியும், மொழிபெயர்த்தும், வாசித்தும் தங்கள் தங்கள் கருத்துக்களைக் கூறி விடுகின்றேம். இது முடிவான முடிவு என்று கருதிவிடுகின்றோம். எதுவும் முடிவான முடிவு அல்ல. ஒரு முடிவில் இருந்து தான் இன்னொன்று ஆரம்பமாகும்.
நாம் எழுதும் விடையங்களை அவதானித்தாலும் (இதற்குப் பலவிதமான பரிணாமம், வாசிப்பு, மொழி பெயர்ப்பு இருப்பதை மறுதழித்து) கருத்துக்குக் கருத்து ரீதியாக விமர்சிக்காமல்த் தங்களின் பரிணாமப்படியும், மொழி பெயர்ப்பின்படியும், வாசிப்பின்படியும் செயற்படுவது என்பது தனி மனித மேலாதிக்க அதிகாரச் சிந்தனையின் செயல் வடிவமாகும்.
ஊதாரணமாகத் தளபதி எழுதியதைக் கூறிப்பிடலாம். சுந்தரத்தின் கொலையின் பின்னணியைத்தான் நான் கூறிப்பிட்டேன். அவர் துரோகியா? இல்லையா? என்பது அடுத்த கட்டமாகும். இதனால் சம்மந்தம் சம்மந்தம் இல்லாமல் முரண்பாடாக எழுதுவது ஆணவமிக்கத் தனிமனித சிந்தனையாகும்.
நான் விளங்கிக் கொள்ளாமல் எழுதியுள்ளேன் என்று நீங்கள் எண்ணினால் அது என் தப்பு இல்லை.
நீங்கள் (தளபதி, பூராசா, செழியன்) அனைவரும் மார்க்சியத்துடனும், மாற்றுக் கருத்துடனும் நெருங்கய தொடர்பு உடையவர்கள். ஏன் இப்படி எழுதுகின்றீர்கள் என்ற கேள்வியைப் பல கோணத்தில் அலசும் போது இன்று வரை நீங்கள் யாழ் உயர் இந்து மேலாதிக்க மேட்டுக் குடிச் சிந்தனையின் வசப்பட்டவர்கள் என்ற விடையம் எனது பார்வையில் தென்படுகின்றது. இது பிழையாக இருக்கலாம் அல்லது சரியாக இருக்கலாம். இது உங்கள் செயற் பாட்டில்த் தான் உண்டு. நீங்கள் எழுத்து மூலமாக வைக்கப்படும் விடையங்கள் யாவும் ஆவணமாகி விடும். இது நன்மையையும் அளிக்கும் தீமையையும் உருவாக்கும்.
எமது இளம் பரம்பரையினர்கள் இயற்கைவியல் இயங்கியல்த் தத்துவப் படியும், ரிலேற்றிவ் (சுநடயவiஎவைல) சிற்றித் தத்துவப் படியும் நாம் அவர்களால் நாளை தூக்கி எறியப்படலாம். இதற்கு ஜோமன் வரலாறு உதாரணமாகும்.
நீங்கள் இன்று கனடாவில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றீர்கள். இங்குள்ளவர்களிடம் ஒரு கேள்வியைக் கேட்டுப் பாருங்கள் என்ன பதில் கிடைக்கின்றது என்று பாருங்கள்.
உங்கள் கேள்வி மிக உன்னதமானது அல்லது சிறந்தது என்று கூறி எங்கள் கருத்துடன் என்னால் ஒத்து வர முடியாது என்ற பதில் வரும்.
இது அவர்களின் அறிவியல் நாகரீக மனித வளர்ச்சியை படம் பிடித்துக் காட்டுகின்றது. இதனால் இவர்கள் ஒரு ஜனநாயக வாதி என்றோ, அல்லது அறிவுயீவிகள் என்றோ பொருள் அல்ல. அவருடைய கருத்துக்கும் எங்களுடைய கருத்துக்கும் ஒத்து வரவில்லை என்பதே பொருளாகும்.
உங்கள் செயற்படுத்தும் விடையங்கள் (எழுத்துக்கள்) மற்ற மனிதர்களைப் புண்படுத்தவோ, காயப்படுத்தவோ அல்லது பிழையான அர்த்தப்படுத்தவோ கூடாது என்பதற்காகவும், மற்றவர்களின் செயல்ப் பாடுகளைத் தனிப்பட்ட விதத்தில் கொச்சைப்படுத்தாமல் ஜதார்த்தமான முறையில் சிந்தித்துக் கருத்து ரீதியாக சகல விடையங்களையும் முன் வைங்கள்.
முதுகு சொறிகின்றது என்பதற்காக ஒருவரின் வளர்ச்சிக்குத் தட்டிக் கொடுப்பது அல்லது காலை வாரி விடுவது, அல்லது எதிர்ப்பதற்கு ஆதரவு தேடுவது அல்லது சீண்டி விடுவது போன்ற பல அர்த்தங்கள் உண்டு.
தொடரும் என்பது நாம் கூறிய விடையம் சரி என்று நிருபிப்பதற்கு. இவர் யார் அவரைப்; பற்றி எழுதுவது என்பது தங்கள் செயற்பாடுகளை மறைப்பதற்காக. இது தனிமனித அதிகார ஜனநாயகமாகும்.
கருத்துக்குக் கருத்துக் கூறுவது மனித ஜனநாயக உரிமையாகும். கரித்துண்டின் ஆரோக்கியமாக கருத்து விவாதத்தைக் கொண்டு செல்வது எமது கடமை