கிழக்கு யாழ் மையவாத்தில் இருந்தும், யாழ் ஈழப் பயங்கரவாத்தில் இருந்து விடுபட்டாலும் யாழ் மேலாதிக்க பிடியில் இருந்து விடுபடவில்லை என்பதை இன்று கிழக்கில் இடம் பெறும் நிகழ்வுகள் படம் பிடித்துக் காட்டுகின்றது.
கிழக்கில் அன்று குடியேறிய யாழ்பாணிகளின் (கிழக்கு பூர்விகக் குடிகள் என கருதி) செயல்ப்பாடு நபர்கள் மூலமாக கருணா, பிள்ளையான் என்ற பகை முரண்பாடுகளை உருவாக்கியதன் விழைவுதான் இன்று கிழக்கில் இட பெறும் அசம்பாவிதங்களும், நிகழ்வுகள் ஆகம். இவர்கள் கிழக்குத் தலைமைத்துக்கு வருவதற்கு முன் யாழ் மேலாதிக்க மையவாதச் சிந்தனையின் ஊறிப்பேனவர்களும், யாழ் தமிழ் ஈழப் பயங்கரவாதிகளை மனப் பூர்வமாக ஆதரித்தவர்கள் ஆகும்.
இதற்கு அன்மையில் கொலை செய்யப்பட்ட ரகு (வெளிநாட்டில் ஈழப் பயங்கர அமைப்புக்கு அந்த நாட்டின் பொறுப்பாளராக செயல்ப்பட்டவர்) நல்ல உதாரணமாகும். இவரால் கிழக்கை கிழக்கு மகன் தான் ஆள வேண்டும் என்று கருதியவரும், யாழ் மையவாதத்தையும், இப் பயங்கரவாத்தையும் கிழக்கில் இருந்து துடைத்து எறிய அத்திவாரம் இட்ட கருணாவை அமைப்பில் இருந்து ஓரம் கட்டும் எடுத்த முயச்சியில் பலன் தான் இன்று கிழக்கில் இடம் பெரும் அசம்பாவித நிகழ்வுகள் ஆகும்.
இந்தத் தலைமையின் நடவடிக்கைகள் யாவையின் ஒருதரம் புரட்டிப் பார்த்தால் உண்மை புரியும்.
முதல் முதல் உலகத்தில் உருவாக்கப்பட்ட பயங்கரவாதம் மதத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது. மொழிகள் அங்கு விதிவிளக்காக அமைந்து இருந்தது. பல மொழி பேசுகின்ற மக்களை கொண்ட கிரிஸ்தவ மதம் தான் சிலுவை யுத்த மூலம் முதலாவது அரசியல்ப் பயங்கரவாத்தைத் தேற்றிவித்தது. தங்கள் பழமை கொண்ட மதத்துக்கும், எதிராக, (அரசு அதிகார ஆளமைக்கு பங்கம் ஏர்ப்பட்டுவிடும் என்று கருதி) ஆளும் அதிகார வர்க்கம் மதத்தின் பெயரால் இவ் யுத்தத்தை சீர் திருத்தத்தை உருவாக்கிய புதிதாக உருவாகிய மாற்று மதத்துக்கு எதிராக இவ் பயங்கரவாதத்தை உருவாக்கினார்கள். இவ் இரு மாத வாதிகள் (தலைமைகள்) தங்கள் நற்ப்பு கொண்ட குடும்ப உறவுகளையும், உடைமைகளையும் அழிக்கப் படுவதால்; இவ் யுத்தத்தைத் தடுக்க இவ் இரு மதங்களையும் ஆளும் அதிகார வர்கங்களாக அங்கிகரித்தார்கள். இதனால் அம் மக்கள் மதத்துக்கு அடிமையாக்கினார்கள். இதனால் மக்கள் மத்தியில் இருந்து பயங்கரவாதம் உதிர்ந்து விட்டது. இதற்கு இவர்கள் மத்தியில் உருவான அறிவியல் வளச்சிகள், விஞான வளச்சிகள், யந்திரப் புரட்சி போன்றவை பயங்கரவாத்தை மறைத்து அம் மக்களை ஜனநாயக வாதினளாக சிந்தரித்தரித்தது.
றோம் கத்தோலிக்கமதம் என்பது (உருவங்களை வளிபடுபவர்கள்) றோமை தலைமையகமாகக் கொண்டது. பழைமைவாத மதம்., புரட்டஸ்தாந் மதம் ( உருவங்களை வளிபடுவது இல்லை) கிரிஸத்தவ மதத்தை சீர் திருத்திய மதம். கிரிஸ்தவ மதத்துக்கு எதிராக சில மாற்றங்களை உருவாக்கியபடியால் புரட்டஸ்சாந்து மதம். ஐரோப்பாவை மையமாகக் கொண்டது.
வட அமொரிக்காவில் இருந்து றோமன் கத்தோலிக்கத்துக்கு எதிராக 20 க்கு மேல்ப்பட்ட கிரிஸ்த மதங்களை உருவாக்கி உலகம் எங்கும் பரப்பினார்கள். இம் மதங்கள் ஆசியாக் கண்டத்தையும், ஆபிரிக்கா தேசங்களை ஆக்கரிமித்தது. அம மக்களை மந்தைக் கூட்டங்களாக மாற்றியது. இந்தாலும் பயங்கரவாதம் எடுபட வில்லை.( இவை பேன்றிக் கோஸ் என்னும் மதங்கள் ஆகும்)
இஸ்லாம் மதத்துக்கும் பழைமை வாய்ந்த கிரிஸ்தவ மதத்துக்கும் இடையில் பல விதமான ஒற்றுமைகள் உண்டு.
ஜேமனியில் ஆரிய காலச்சாரத்தை மையமாக வைத்து மாற்று இனத்துக்கு (யுதர்களுக்கு) எதிராக மிகப் பெரிய பயங்கரவாதம் உருவாகியது. இது மொழி அடிப்படையில் இப் பயங்கரவாதம் உருவாக வில்லை. இதனால் மனிதம் கொண்ட மனிதர்களின் நடவடிக்கையால் இப் பயங்கரவாதம் துடைத்து எரியப்பட்டது. இதனால்த் தான் கிட்லரின் பிறப்பு உரிமை பறிக்கப்பட்டது.
அமொரிக்காவின் ஆக்கரிப்பு யுத்த நடவடிக்கை தான் இன்று மாற்று மதம் கொண்ட ஒரு கறுப்பு இனத்தைச் சார்ந் நபர் ஜனாதிபதியாக வர முடிந்தது.
இலங்கையில் உருவான தமிழ் பயங்கரவாதம் மத, இன, பிரதே, சாதியம் என்ற அடிப்படையை வைத்துத் தான் உருவாக்கப்பட்டது. இப் பயங்கரவாதம் எப்பெழுது மாற்று இனங்கள் (சிங்களம், முஸ்லிம்) மீதும், அயல் நாடுகள் மீதும் தங்கள் பயங்கரவாத்தைச் செயப்படுத்தியதன் விழைவிவுதான் இப் பயங்கரவாதம் அழிப் பாதைக்குச் சென்றது. இதனால் நாம் இன்று உலகத்தின் பார்வையில் தமிழர்கள் பயங்கரவாதியாக காட்சி அளிக்கின்றோம். இப் பயங்கரவாத்தை உருவாக்குவதற்கு யாழ் உயர் இந்து சாதியின் சிந்தனையாகும். இதைத்தான் யாழ் மேலாதிக்க மையவாதச் சிந்தனை என்று குறிப்பிடுகின்றோன். இதன் வளச்சிக்கு சிங்கள பௌகுத்த பெரின வாத மேலாதிக்க வாதிகளின் செயல்ப்பாடு உரமாக அமைந்தது.
எல்லைப் புரங்களில் வாழும் தமிழ்ப் பேசும் மக்களின் பிள்ளைகள் தான் தங்கள் சமூகப் பாதுகாப்க் கருதி இப் பயங்கர வாததுடன் இணைந்து (சகல ஈழ விடுதலை அமைப்புக்களுடன்) வளாப்பதற்கு பல உயிர் தியாகங்களைச் செய்தார்கள். (கிழக்கு, வன்னி தமிழ்ப் பேசும் இளைஞர்கள்).
யாழ் ஈழப் பயங்கரவாதம் பிரதேச ரீதியாகவும், இன ரீதியாகவும் செயல்ப்பட்டதன் விழைவு இவ் இளைஞர்கள் பிரிந்து யாழ் மேலாதிக்க மையவாதச் சிந்தனைக்கு எதிராக செயல்ப்பட்டார்கள். (உடைந்து). இதனால்த் தான் இப் பயங்கரவாதம் அழிக்ப்படுவதற்கு மூலகாரணமாகும். தெறிந்தே தெறியாமலே இதை வித்திட்டவர் கருணாவாகும். இவருக்கு முன் இந்த யாழ் மையவாதத்துக்கு எதிராக செயல்ப்பட்டு விலாசம் இல்லாமல் போய்விட்டார்கள பலர்;. கருணா யாழ் மைய வாதத்துக்கு எதிராக வெற்றி கொண்டதற்கு ஆயுதம் தான் மூல காரணமாகும். இதற்கு சிங்கள முற்போக்க அரசியல் வாதிகளும் மூல காரணியாக அமைந்தார்கள் இருந்தாலும் பிரிந்து வரும் போது யாழ் மைய வாதச் சிந்தனையை உள் வாங்கிக் கொண்ட சில நபர்கள் (சில தலைமைகள்) இருந்த படியால்த் தான் (தங்கள் அதிகாரத்துக்கு வருவதற்கு) இன்று கிழக்கில் இடம் பெறும் மனித கொலைகள் சாட்சியாகும்.
கிழக்கை பூர்வீகமாக கொண்ட கிழக்கு மக்கள் மற்றைய அமைப்க்களுடன்
(யாழ்த் தலைமையை கொண்ட இலங்கைத் தேசியத்தை உள் வாங்கிய அமைப்புக்கள்) இணைந்து கிழக்கு மாகாண மக்களின் நலனுக்காக அரசியல் வேலைகள் செய்யவதற்கும், இயங்குவதற்கும் தடை விதித்தது. அடவடித்தனத்தையும் நடைமுறைப்படித்தியது. இது யாழ் ஈழப் பயங்கரவாதிகள் மற்றைய ஈழ விடுதலை அமைப்புக்களை அழித்து இயங்கவிடாதும், முஸ்லீம் மக்கள் மீது அடவடித் தனம் புரிவதைப் பார்க்கும் போது இவர்கள் ஓரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பது நீருபணமாகின்றது.
இதில் இருந்து இவர்கள் இன்று வரை யாழ் மையவாதச் சிந்தனையில் (பயங்கரவாத்தை) இருந்து விடுபட்டு வெளிவரவில்லை என்பதை நீருபிக்கின்றது. யாழ் ஈழப் பயங்கரவாதிகள் தங்கள் அடவடித்தனத்தை மறைப்பதற்று எந்த விதமான அனுக முறையைக் கையாண்டார்கலே அதே முறையான அனுகு முறைகளை இவர்கள் கையாளுகின்றார்கள்.
உதாரணமாக உண்ன விரதம், ஊடக அறிக்கைகள், மறியல் போராட்டங்கள் போன்றவையாகும்.
கருணா மனித உரிமை மீறிவிட்டார் என்று யாழ் மையவாதிகளும், யாழ் ஈழப் பயங்கரவாதிகளும், இவர்களுக்கு வக்காளத்து வாங்கும் சமூக சேவை ஸ்தாபனங்களும் உலக சமாதான அமைப்புக்களும் உரக்கக் கத்தி கருணாவை உலக நீதி மன்றத்தில் நேறுத்தி தண்டனை வாங்கிக் கொடுப்பதற்கு உலக நாடுகளின் மனித உரிமை அமைப்புக்கள் கங்கன கட்டிய வேலையில் இலங்கை அரசு கருணாவை இங்கிளாத்துக்கு அனுப்பி தாங்கள் அரச பயங்கரவாதிகள் இல்லை எனபதையும், கருணா மனித உரிமை மிறவில்லை என்பதையும் நிருபித்தார்கள். இதன் ஊடாக யாழ் ஈழப் பயங்கவரவாதிகள் தான் மனித உரிமை மிறினார்கள் என்பதை புலப்படித்தி உலக மனித உரிமை அமைப்புக்களின் வாய்களை அடைத்தார்கள்.
யாழ் மையவாதத்துக்கும், யாழ் ஈழப் பயங்கரவத்துக்கும் எதிராகச் கருணா செயல்பட்ட படியாலத் தான் அவர் மனித உரிமை மிறினார் என்று குற்றம் சாட்டப்பட்டது. கருணாவைத் தவிர யாழ் ஈழப் பயங்கரவாத் அமைப்பில் இருந்து வெளியேறிய எந்த நபர்களும் அவ் அமைப்புக்கு எதிராக விமர்சிக்கவும் இல்லை செயல்படவும் இல்லை. இதனால் பல நபர்களின் செயல்ப்பாடுகள் யாழ் மேலாதிக்க மையவாதக்கு ஆதரவாகவே அமைத்துள்ளது.
இவ் சூழ் நிலை காரணமாக கருணா வெளிநாட்டுக்குச் சென்றதால் இந்த யாழ் மையவாதிகளின் கை ஓங்கியது. கருணாவுக்கு அலர் ஆதரவாளர்களுக்கு எதிராக பல அடவடித்ததத்தைஇந்த கிழக்குத் தலமை நடைமுறைப்படித்தியது இதனால் சில யாழ் மையவாதிகளின் ஆதரவாளர்கள் இவ் அமைப்பில் அதிகாரம் கொண்ட தலைவர்களாக வர முடிந்தது. இந் தருணத்தில் கருணா மிண்டும் இலங்கைக்கு வந்து இறங்கினார். இதால் இரு தலைமைத்துவத்துக்கும் இடையில் பல அடவடித்தனங்கள் கிழக்கில் இடம் பெருகின்றது. கருணா யாழ்ப்பாணிகளுக்கு எதிராக எடுத்த நடவடிக்கையும், கிழக்கு மக்கள் (பூர்விக கிழக்கான்) கிழக்கை ஆள வேண்டும் என்று கூறிய போக்கும் கருணாவுக்கு எதிராண போக்கை உருவாக்கியது.
இந் தலைமை கிழக்கு மக்களின் சமூக ஜனநாயக அரசியலை நடைமுறைப்படுத்த தவறியதன் விழைவும், தனி மனிதனுக்கு (கருனாவுக்கு) எதிரான நடவடிக்கை தான் இக் கொலைகள் ஆகம்.
இன்றைய கிழக்கத் தலைகளுக்கு எதிராக யாழ் மையவாதிகள். ஈழப் பயங்கரவாதிகள், உலக அமைப்புக்கள் எந்தக் குற்றச்சாட்டுக்களை சுமத்த வில்லை, (கருணாவைத் தவிர) ஏன் என்ற கேள்வியை எழுப்பிப் பாருங்கள் உண்மை புரியும்.
இன்று உலகத்தில் உள்ள தமிழ் மாற்றுக் கருத்து வாதிகளின் செல்ப்பாடுகளும், மார்க்சிய வாதிகளின் நடவடிக்கைகளும், இடதுசாரிகளின் போராட்டங்களும் ஈழப் பயங்கரவாத்தை ஆதரிக்கின்றது. அதே பாணியில்த் தான் கருணாவுக்கு எதிராக இன்றைய கிழக்குத் தலைமைகளின் செயல்ப்பாடாகும்.
மக்களின் அல்லது ஒரு நாட்டின் விடுதலையை, சுதந்திரத்தை, ஜனநாயகத்தை பெற்றுக் கொடுக்கும் தகுதி நமக்குள் இருக்க வேண்டும் இதை இன்றைய கிழக்குத் தலைமை தவர விட்டு விட்டது. இதனால்த்தான் இன்று கிழக்கில் இடம் பெறும் நிகழ்வுகள் சாட்சியாகும்.
யாழ் ஈழப் பயங்கரவாத்தில் இருந்து (யாழ் மையவாதச் சிந்தனையில் இருந்து) வளர்ந்து வந்த எவரும் (எந்த இனமானாலும் சரி, சாதியானாலும் சரி. புpரதேசவாதியானாலும் சரி) தங்களை ஒரு மாற்றுத் தளத்துக்கு தங்களை மாற்றத வரை இக் கொலைகள் இடம் பெரும். இவ் கொலைகள் இவர்களை அழித்து விடும் (இவர்கள் மாறவிட்டால் இவர்கள் அழிவதற்கு குறைந்தது 30 வருடங்கம் தேவைப்படலாம்)
யாழ் ஈழப் பயங்கரவாத்தால் நடைபெற்ற படு கொலைகள் தமிழ்ப் பேசும் மக்களுக்கு ஒரு துளி கூட நன்மை கிடைததாகத் தெரியவில்லை மாறாக பயம்தான மிஞ்சியது. இப் பயந்தால்த் தான் இன்று வரை யாழ் ஈழப் பயங்கரவாதிகள் உயிர் வாழ்த்தார்கள். அது போன்றுதான் இன்று கிழக்குத் தலைமையின் செயல்ப் பாடு அமைந்துள்ளது. இக் அடாவடித் தனத்தால் கிழக்குத் தமிழ்ப் பேசும் மக்களுக்கு ஒரு துளி நன்மை கிடைத்ததா என்று சிந்தித்துப் பாருங்கள். இவ் அடாவடித்தானம் கிழக்குத் தலைமைய் அதிகாரம் வளர்க்கத்தை ஸ்திரப்படுத்துவதற்காக அமைகின்றது. யார் வந்தாலும் கிழக்கு மக்களாகி நாம் அடிமைகள் தான் என்று சாதாரண விளிம்பு நிலை மக்கள் கருதுகின்றார்கள். அதனால் இரார் அண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன? என்ற மனேபாவம் அம் மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது. இவர்களின் செயல்ப்பாட்டால்த் தான் சிங்கள மகனான ராஜபக்சா தமிழ்ப் பேசும் மக்களின் மத்தியில் சிறந்த ஆளுமை படைத்த தலைவனாக பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளான்.
இவர்கள் தங்கள் மக்களின் நலன் கருதி மாற்றுத் தளத்தை அமைத்து, அப் பயங்கரவாத்தால் தம் மக்கள் அனுபவித்த துன்பம் துயரங்களை மனதில் கொண்டு சமூக அரசியலையும், மக்கள் ஜனநாணத்தையும் பன்முகத் தன்மையையும் நிலைநாட்ட வேண்டும். மீண்டும் யாழ் ஈழப் பயங்கரவாதம் போன்று கிழக்கில் உருவாக முடியாது. உலகம் பயங்கரவாத்தை அழிக்க வேண்டும் என்று கங்கனம் கட்டிக் கொண்டு நிற்கின்றது.
எனவே கிழக்கு மக்களும், இன்றைய தலைமைகளும், புலம்பெயர்ந்து வாழும் கிழக்கு மக்களும் நல்லது ஒரு தலைமைத்துவத்தை உருவாக்க வேண்டும். இது தான் இன்றைய உங்களின் பிரதான கடமையாகம்.
யாழ் ஈழப் பயங்கரவாதிகள் (யாழ் மையவாதச் சிந்தனை கொண்டவர்கள்) உள்வாங்குவது, (அவர்கள் கிழக்கை பூர்விகமாக் கொண்டவர்களாக இருந்தாலும் சரி) அவர்களை இனம் கண்டு (எதிரியாகக் கருதாமல்) செயல்ப்படுவது இன்றைய தலையான கடமையாகும். (30 வருடங்களாக பல ஆயிரக்கணக்க உயிர்களை பலி எடுத்த ஈழப் பயங்கரவாத்தை மறக்கவேண்டாம்)
இது தான் சமூக அரசிலை விரும்புவர்களின் அன்பான வேண்டு கோள்;.
இல்லாவிட்டால் நீங்கள் உங்களை அழிப்பது எனபது உருதியாகிவிடும்.